ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமியை இனிமேல் மு.சாமி என்றுதான் அழைக்கவேண்டும் போல் உள்ளது.அந்த அளவுக்கு முட்டையால் சிறப்பு மரியாதை செய்துள்ளனர் வழக்கறிஞர்கள்.
செய்தி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமியை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசே நிர்வகிக்கலாம் என்று கோர்ட் தீர்ப்பளித்ததை எதிர்த்து, தீட்சிதர்கள் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை இன்று நீதிபகிள் மிஷ்ரா, சந்துரு ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை செய்தது. அப்போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமி, நீதிபதிகளிடம் மனு கொடுத்தார்.
சுப்பிரமணிய சாமியின் மனுவை நீதிபதிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போது, இலங்கை பிரச்சனைக்காக கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து, சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். மேலும் முட்டை, தக்காளி ஆகியவற்றை அவர் மீது வீசியதுடன், அவர் சேர்ந்த சமுதாயத்தையும் கடுûமான வார்த்தைகளால் திட்டிய வக்கீல்கள் சிலர் அவரை தாக்கினார்கள்.
அப்போது சுப்பிரமணிய சாமியின் தலையில் இரண்டு முட்டைகள் விழுந்தன. சுப்பிரமணிய சாமி மீதான இந்த தீடீர் தாக்குதலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. நீதிமன்ற வளாகத்திலேயே தாக்குதல் நடக்கிறது. இதற்கு காரணமான தமிழக அரசை கலைக்க வேண்டும். என் மீதான தாக்குதலை சும்மா விடமாட்டேன். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டீல் வழக்கு தொடருவேன் என்றார்.
No comments:
Post a Comment