|
|
சீனாவில் குவாங்ஸு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர்,தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.பாட்டரி வெடித்த வேகத்தில் அவருடைய கழுத்தில் உள்ள ரத்தக் குழாய் வெடித்துச் சிதறியது. இறந்தவர் தனது செல்போனில் உள்ள பாட்டரியை எடுத்துவிட்டு புதிய பாட்டரியை பொருத்தியபோது வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். ஆனால் அவர்,தனது பாட்டரியை சார்ஜ் செய்துவிட்டு செல்போனை சட்டைப்பையில் வைத்தபோது வெடித்ததாக மற்றொருவர் கூறினார்.சீனாவில் இதுபோன்று செல்போன் வெடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளதாக"தி டெய்லி டெலிகிராப்"செய்தி வெளியிட்டுள்ளது. எது இருப்பினும்,செல்போன் உபயோகிப்பாளர்கள் கவனிக்க வேண்டியவை: தரமான பாட்டரியை பயன்படுத்துங்கள்,சூரிய வெப்பம் நேரடியாக புகாத வகையிலும்,உயர் வெப்பம் படாதவகையிலும் வைத்திருக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக செல்போனில் நீண்ட நேரம் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1233832166&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment