Thursday, February 26, 2009

தமிழீழ விடுதலைப்புலிகளும் ,இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகளை மீறுகின்றன

இலங்கை அரசாங்கமும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை அரசாங்கத்துடன் இயங்கும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன என தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களே இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

கொலைகள், கடத்தல்கள் மற்றும் கைதுகள், காணாமல் போதல் போன்ற நடவடிக்கைகள், யாவும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் இடம்பெறுவதால், அரசாங்கமே இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் என இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கின் பிரதேசங்களில் உளவாளிகளாக செயற்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை கொலை செய்தல் மற்றும் கடத்திச்செல்லல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பிரதேசத்தில் ஆட்களை தடுத்து வைத்தல், பேச்சு சுதந்திரமின்மை, ஊடக சுதந்திரமின்மை மற்றும் சிறுவர்களை படைகளுக்கு சேர்த்தல் போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dvj0q0ecQG7r3b4P9Ei4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails