உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம் |
|
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். |
இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். |
No comments:
Post a Comment