Monday, February 16, 2009

சோவும்,பிஜேபியும், மோடியின் புத்தக விழாவில் நடத்திய கூத்து

ஈழத்தமிழர்களுக்கு எதிராக பேசிய சோவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு: அரங்கத்தில் பரபரப்பு
சோ இப்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது கொஞ்சமும் இவ்விழாவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஈழப்பிரச்சனை பற்றி பேசினார்.

இலங்கை பிரச்சனையில் தமிழக பிஜேபியினருக்கு புதுப்பாசம் வந்திருக்கிறது. இந்த விசயத்தை பற்றி பேச எனக்கு சரியான இடம் அமையவில்லை. இந்த மேடைதான் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இதை பயன்படுத்திக்கொண்டு பேசுகிறேன்.

பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று காஷ்மீர் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் குண்டுகள் வீசி தாக்குகிறது. அதைப்போய் ஏன் குண்டு வீசுகிறீர்கள் என்று கேட்க முடியுமா? அப்படித்தான்...இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவம் போரிடுகிறது. அதை நிறுத்துங்கள் என்று சொல்லமுடியாது. எப்படித்தான் சொல்ல முடியும்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கை பிரச்சனை குறித்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருகிறார். அதே போல் தான் நானும் எனது இந்த கருத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறேன்..

தமிழக பிஜேபியினர்தான் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லை என்று சோ ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்க, தமிழில் பேசு என்று பிஜேபியினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.தொடர்ந்து சோ ஆங்கிலத்திலேயே பேச, புத்தக சம்பந்தமா மட்டும் பேசு, சம்பந்தம் இல்லாம இலங்கை பிரச்சனை பற்றி பேசாதே என்று பிஜேபியினர் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.

சோ பேச்சை நிறுத்தாமல் நான் இப்போதும் சொல்கிறேன் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்' என்று பேசினார். கடைசியில் எதிர்ப்புக்குரல் வலுக்கவும், பிஜேபியினர் எழுந்து நின்று கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் நன்றி,வணக்கம் என்று உரையை முடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

இதனால் அரங்கத்தில் பெரும் சலசலப்பு உண்டானது.

நரேந்திர மோடி பேசும் போது சோ பேச்சைப் பற்றியும், அதனால் எழுந்த சலசலப்பு பற்றியும் எதுவும் பேசவில்லை. தனது புத்தகத்தைப் பற்றியும் தனது ஆட்சியின் சாதனைகள் பற்றியும் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார்.

நன்றி நக்கீரன்
http://www.swisstamilweb.com/

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails