கிழக்கிலங்கையில் மக்கள் விடுதலை ராணுவம் உதயம்; டைம்ஸ்
போர் முடிந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்து ஆறு மாதங்களின் பின்னர் டைம்ஸ் லண்டன் பத்திரிகையின் அறிக்கையில் இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. தமிழ் போராட்டக்காரர்களின் மார்க்கிஸ்ட் குழு ஒன்று பாலஸ்தீனியன் விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் இணைந்தி புதியதொரு புரட்சியை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளதாக அப்பத்திரிகை மேலும் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை ஆவன:
நான்கு மாதங்களுக்க்கு முன்னர் மக்கள் விடுதலை ராணுவம் (ம.வி.ரா)என்ற அமைப்பு இலங்கையின் கிழக்குப் பகுதியில் தோன்றியுள்ளதாகவும், ஈழத்தமிழர்களுக்கென தனித்த நாடு கிடைக்கும்வரை அரசாங்கத்துக்கும், ராணுவ இலக்குகளுக்கும் எதிராக தாக்குதல் நடத்துவதென்றும் சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்.
கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு, கிழக்கிலங்கையிலுள்ள ஒரு பாதுகாப்பான வீட்டிலிருந்து அந்த இயக்கத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி கொமாண்டர் கோணேஸ் லண்டன் டைம்ஸுக்கு வழங்கிய பேட்டியின்போது, இந்த போர் இன்னும் ஓயவில்லை, கடந்த மே மாதம் புலிகளை அழித்துவிட்டதாகக் கூறினும் தமிழர் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை, எனவே செயல்படுவதற்காக நாங்கள் ஒன்றாகியுள்ளோம், எங்கள் நோக்கு வடக்கு கிழக்கில் தமிழீழத்துகான ஜனநாயக சுதந்திரம் தேவை என்பதாகும் என்றார்.
தற்போது 300 செயற்பாட்டாளர்களைக் கொண்டுள்ள தமது இயக்கத்தில், அண்மையில் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களிடையேயும் தொண்டர்களைச் சேர்ப்பதன் மூலம் தமது எண்ணிக்கையை 5000 ஆக உயர்த்தவுள்ளதாகக் கூறிய கோணேஸ் இந்த இயக்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து முற்றுமுழுதாக வேறுபட்ட இரு இயக்கம் எனக் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் விடுதலைப் புலிகள் இந்த மக்கள் விடுதலை ராணுவத்தில் சேரலாம் ஆனால் தமது அரசியல் நோக்கங்களுக்காக அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் விடுதலைபுலிகளும் தமது ராணுவத்தில் உள்ளதாகக் கூறியுள்ள அவர், ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் மக்கள் தேவைகளுக்காக அல்லாமல் தமக்காகவே சண்டையிட்டார்கள் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். அவ்வியக்கம் முற்றுமுழுதாக இப்போது அழிக்கப்பட்டு விட்டது, அதற்காக நான் கவலை கொள்ளவில்லை என்றார் அவர் மேலும்.
மக்கள் விடுதலை ராணுவத்தின் திறன் இன்னமும் தெரியவில்லை எனினும் அந்த இயக்கத்தில் முன்னர் அரச படைகளுக்கு எதிராக போராடிய பலர் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. தனது 40 ஆவது வயதுகளிலுள்ள கோணேஸ் 1983 இல் இந்தியா உத்தரபிரதேசத்தில் கெரில்லா பயிற்சி பெற்றுள்ளார். அவர் பாலஸ்தீனியன் விடுதலை இயக்க பயிற்சியாளர்களிடம் இருந்தும் பயிற்சி பெற்றுள்ளார்.
தமக்கு இப்போதும் பாலஸ்தீன இயக்கத்துடனும் கியூபாவுடனும் இந்திய மாவோயிஸ்டுகளுடனும் தொடர்பு உள்ளதாக கேணேஸ் கூறியுள்ளார். தமது எதிரி அரசாங்கம் என்றும் தமிழர்களுக்காகவே தாம் போராடுவதாகவும் கூறிய கோணேஸ் தமது பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment