Tuesday, December 15, 2009

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழர் ஒருவர் போட்டி-வேட்பு மனு தாக்கல்

எம் கே சிவாஜிலிங்கம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருகிறார்

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதென தீர்மானித்து தமது கட்டுப்பணமான 75 ஆயிரம் ரூபாவை இன்று செலுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிலர் மகிந்தவை ஆதரிப்பது என்றும் வேறு சிலர் ரணிலை ஆதரிப்பது என்றும் கூட்டாக அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை சிவாஜிலிங்கத்தின் இந்த துணிகர முடிவு வரவேற்க்கத்தக்கது. தற்போது தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகிறார். அனைத்துத் தமிழ் மக்களின் வாக்குகளும் அவருக்கே செல்லவேண்டும் . அதுவே தமிழ் தேசியமாகும். 

இந்தநிலையில் நாளை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதிநாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் ஒருவரை நிறுத்துமானால் தாம் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதேவேளை தாமும் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவும் இணைந்தே தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைபில் சில காலமாக சிக்கல்கள் இருந்துவருவது தெரிந்ததே. பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, சிவநாதன் கிஷோர் ஆகியோர் மகிந்தவுக்கு பந்தம் பிடிக்க ஆரம்பிக்கும் இவ்வேளை சிவாஜிலிங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்க்கத்தக்கது. இத் தேர்தலில் சிவாஜிலிங்கம் வெல்வது அரிது என்பது ஒருபுறம் இருக்க தமிழ் தேசியம் நிலை நாட்டப்படவேண்டும் என்பதே இங்கு முக்கியமான விடையமாகும்.




source:athirvu
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails