காதல்வசப்படுத்தி இளம்பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்: இந்து முன்னணி
செல்போனில் மிஸ்டு கால் அழைப்பு மூலம் பழக்கம் ஏற்படுத்தி இளம்பெண்களை காதல் வயப்படுத்தி மத மாற்றம் செய்கிறார்கள், இது குறித்து இந்து சமுதாய இளம் பெண்களும், அவர்களின் பெற்றோரும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன்,
கல்லூரிகள் அல்லது உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் இளம்பெண்களை திட்டமிட்டு காதலித்து, அவர்களை திருமணம் செய்துகொள்கிறோம் என்ற பெயரில் மதமாற்றம் செய்தும், அவர்களை பின்னர் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் புதியவகை தீவிரவாதம் உருவெடுத்து உள்ளது.
முதலில் இளம்பெண்களுக்கு செல்போன் மூலம் மிஸ்டுகால் அழைப்பு விடப்படும். அந்த மிஸ்டுகால் அழைப்பை பார்த்து அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினால், தவறுதலாக அழைத்துவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் நல்லவர்கள் போல் பேசி அந்த இளம் பெண்களிடம் பழக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
பின்னர் அவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு காதலிப்பதாக கூறி தங்கள் வலையில் விழவைத்துவிடுவார்கள். அதன்பிறகு அவர்களை திருமணம் செய்துகொள்வதாகவும், அதற்காக அவர்கள் மதம் மாற வேண்டும் என்று கூறி மதம்மாற்றி விடுவார்கள். இதன் காரணமாக அந்த இளம் பெண்கள் அவர்கள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிடுகிறார்கள்.
இதற்கு உதாரணமாக கொடுங்கைழூரில் வெடிகுண்டுகள் ஆயுதங்களை மறைத்து வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெயர் ஆயிஷா. ஆனால் அவர் சங்கீதா என்ற இந்து பெண்ணாக இருந்து காதல்வலை விரிக்கப்பட்டு ஆயிஷாவாக மதம் மாற்றப்பட்டவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும்போதோ காணாமல்போன இளம்பெண்கள், அவர்களில் எத்தனைபேர் மதம்மாற்றம் செய்யப்பட்டு காதல் திருமணம் செய்துள்ளனர், அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
மேலும் பெற்றோர் கல்லூரிகளில் படிக்கும் தங்கள் மகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் வாழ்வு திசைமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே இளம் பெண்கள் தங்களுக்கு தெரியாத நம்பர்களில் இருந்து மிஸ்டுகால் அழைப்பு வந்தால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது.
இதற்காக இந்து முன்னணி சார்பில் பெற்றோர் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வருகிற 2 ந்தேதி மற்றும் 3 ந் தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறும் இந்து முன்னணி மாநில மாநாட்டில் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றார்.
sourece:nakkheeran
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment