Sunday, December 20, 2009

கட்டாய மதமாற்ற தடை சட்டம்: கேரள அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

 

Court news detail
கொச்சி : ""கேரள போலீசாரும், உள்துறையும் தந்துள்ள தகவல்களுக்கு மாறாக, மாநிலத்தில் "லவ் ஜிகாத்' என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையில், அரசு புதிய சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கேரள ஐகோர்ட் கூறியுள்ளது.



கேரளாவில், பிற மதங்களைச் சேர்ந்த இளம்பெண்களை, பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் "லவ் ஜிகாத்' என்ற காதல் வலையில் வீழ்த்தி அவர்களைப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஷெகன்ஷா என்ற முஸ்லிம் வாலிபர் காதல் என்ற பெயரில் மதமாறக் கட்டாயப்படுத்தினார், என்ற வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி சங்கரன், "லவ் ஜிகாத்' என்ற பெயரில் பிற மதத்துப் பெண்கள் மதம் மாற்றப்படுவது குறித்து போலீசார் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.



மாநில டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ், இதுபற்றி சமர்ப்பித்த அறிக்கையில்,"லவ் ஜிகாத் என்ற பெயரில் வெளிப்படையான செயல் கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். மாநில உள்ளாட்சித் துறை அமைச்சகமும் "லவ் ஜிகாத்' நடக்கவில்லை என்று அறிக்கை விட்டது. அதே அறிக்கையில் எஸ்.பி.,க்கள் அளித்திருந்த மற்றொரு குறிப்பில், "18 வழக்குகளில் 14, "லவ் ஜிகாத்'தைச் சேர்ந்தவை; 1996லிருந்து "லவ் ஜிகாத்' நடக்கிறது; கடந்த நான்கு ஆண்டுகளில் நாலாயிரம் மதமாற்றங்கள் நடந்துள்ளன; அதன் மூலம் இரண்டாயிரத்து 800 பெண் கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்; இதில், ஆயிரத்து 600 மதமாற்றங்கள் கேரளாவின் வடபகுதியில் குறிப்பாக முஸ்லிம் கள் பெரும் பான்மையாக வாழ்கின்ற மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளன; இந்த மதமாற்றத்தில் "இஸ்லாமிஸ்ட் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாணவர் அமைப் பான "கேம்பஸ் பிரன்ட்' திட்டமிட்டுத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது' என்று குறிப்பிடப் பட்டிருந் தது.



இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சங்கரன் கூறியதாவது: போலீஸ் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு மாறாக போலீசும், உள்துறையும் "லவ் ஜிகாத்' நடக்கவேயில்லை என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானது. அரசியல் சாசனப்படி, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உண்டு. எனினும், மதம் மாறக் கட்டாயப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.  கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கலாம் என்றாலும், அதையே பயன்படுத்தி மதம் மாறக் கட்டாயப்படுத்தக் கூடாது. பல மாநிலங்கள் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் இயற்றியுள்ளன. கேரள அரசும் அதுபோல சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி சங்கரன் கூறியுள்ளார். "லவ் ஜிகாத்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கோரிய மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails