Thursday, December 31, 2009

சின்ன சின்ன செய்திகள்

   

கம்ப்யூட்டர் விற்பனை உயர்வு எச்.பி.முதலிடம்
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை, அதற்கு முந்தைய காலாண்டினைக் காட்டிலும் 24% உயர்ந்திருந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 21 லட்சத்து 90 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் (22.59 லட்சம்) காட்டிலும் குறைவுதான். இந்த காலாண்டில் தான், லேப்டாப் கம்ப்யூட்டர்களின் விற்பனை, முதல் முதலாக 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் மொத்த விற்பனையில் முதலிடத்தை எச்.பி.நிறுவனம் பெற்றுள்ளது. கம்ப்யூட்டர் விற்பனைச் சந்தையில் 17.4 சதவீதம் பங்கினை இது கொண்டுள்ளது. அடுத்ததாக டெல் நிறுவனம் 11.3 சதவீதம், ஏசர் 11.1சதவீதம் பங்கைப் பெற்று, முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் விற்பனையை மட்டும் கணக்கிடுகையிலும், எச்.பி.நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக எச்.சி.எல்., மற்றும் ஏசர் இடம் பெற்றுள்ளன. நோட்புக் கம்ப்யூட்டர்களில் எச்.பி., டெல் நிறுவனங்களை அடுத்து ஏசர் இடம் பெற்றுள்ளது.



ட்ரான்ஸெண்ட் தரும் 64 ஜிபி மெமரி கார்ட்
நொடிக்கு 90 எம்பி தகவல்களைப் படிக்கவும், 60 எம்பி தகவல்களை எழுதவும் திறன் கொண்ட 400 x  காம்பாக்ட் பிளாஷ் மெமரி கார்டுகளை, இந்தத் துறையில் சிறப்பு பெற்ற ட்ரான் ஸெண்ட் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதிக பட்சம் 64 ஜிபி கொள்ளளவு கொண்ட கார்ட்கள் உள்ளன. இதில் 13 ஆயிரம் படங்களைப் பதிந்து வைக்கலாம். மூன்று மணி நேரம் ஓடக் கூடிய முழு எச்.டி. வீடியோ படத்தினைப் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகளில்ECC (Error Correction Code)  என்னும் வசதி அமைக்கப்பட்டு உள்ளதால் டேட்டா பரிமாறப்படுகையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், உடனே அவை சரி செய்யப்படும். இவை டிஜிட்டல் கேமரா பயன்படுத்துபவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். கார்டினை மாற்றாமல் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து படங்களை எடுத்துப்பதிவு செய்து கொண்டே இருக்கலாம். புளு ரே டிஸ்க்குகள் கூட அதிக பட்சம் 50 ஜிபி அளவு தான் மெமரி கொள்ளும்; எனவே இந்த பிளாஷ் மெமரி கார்டுகள் நிச்சயம் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கலாம். 64 ஜிபி திறன் கொண்டது ரூ.27,000, 32 ஜிபி கொண்டது ரூ. 12,800 மற்றும் 16ஜிபி கொண்டது ரூ.6,250 என விலையிடப்பட்டுள்ளது.



கூகுள் மியூசிக் சர்ச்
ஆன்லைனில் பாடல்களுக்கான ஸ்டோர்களைத் தொடங்கி நடத்துவதில் இப்போது கூகுள் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இதற்கென ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. லாலா டாட் காம் ( Lala.com)  மற்றும் மை ஸ்பேஸ் தொடர்புடைய ஐ லைக் ( iLike) நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பாடல்களைக் கேட்டு வாங்குவதற்கான வழிகளை இவை மிக எளிதாக மாற்றி அமைத்துள்ளன. கூகுள் வழங்கும் இந்த மியூசிக் சேவை ஒன்பாக்ஸ் (One Box) என அழைக்கப்படுகிறது. இந்த தேடல் மூலம் முதலில் உங்களுக்குக் கிடைக்க இருக்கும் பாடல் நீங்கள் தேடும் பாடல் தானா என்பதனை, அதனை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மற்ற தளங்கள் இது போன்ற சோதனையாக பாடலைக் கேட்பதை 30 வினாடிகள் என வரையறை செய்துள்ள நிலையில், கூகுள் அதிக நேரம் தருவது தன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தன்னிடத்தே வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூகுள் மேற்கொள்கிறது என்று கூறலாம்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails