சம்பளத்தில், அடிப்படை சம் பளம் , அகவிலைப்படி மட்டும் அல்ல, உதிரிச் சலுகைகள் என்பது தகவல் தொழில்நுட்ப கம் பெனிகள் வருகைக்குப் பின் அதிகரித்தன. இம்மாதிரி சலுகைகள் தருவதற்கு வரிவிலக்கு இருந் தது. ஆனால், உடனடியாக இதன் மீதான நேரடி வரிவிதிப்பு அமலாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகபட்சம் சம்பளம் பெறுபவராக இருந்தால், சம்பளத்தில் 31 சதவீதம் வரை வரியாக கட்ட நேரிடும். இந்த புதிய வருமானவரி "பூதம்' திடீரென இப்போது ஓசைப் படாமல் நுழைந்து விட்டது. கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்தே முன்தேதியிட்டு வரி பிடித்தம் செய்ய, வருமான வரித் துறை உத்தரவிட்டு விட்டதால், ஒராண்டு முழுக்க போடப்படும் வரியை, வரும் மூன்றே மாதங்களில் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கம்பெனிகளுக்கு இது தொடர்பாக வருமான வரித்துறை கடிதம் அனுப்பி விட் டது. மூன்று மாத சம்பளத்தொகையில் ஓராண்டு வரியை பிடித்து விடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வாங்கும் சம்பளத்தில் இருந்தே, தனியார் கம்பெனி ஊழியர்கள் பலருக்கும் வரி பிடித்தம் செய்யப்பட்டு விடும்.
கடந்த பட்ஜெட்டை சமர்ப் பித்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஒரு அதிரடி இன்ப அதிர்ச்சியை தந்தார். அதற்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம், "உதிரி சலுகைகள் ஆதாய வரி' ( பிரிஞ்ச் பெனிபிட் டாக்ஸ்)என்று ஒரு வரியை போட்டிருந்தார். அதை பிரணாப் நீக்கினார். ஒருவர் பெறும் சம்பளத்தில் சேரும் இதர சலுகைகள் மீதான வரி. இதை பிரணாப் ரத்து செய்ததும், தனியார் நிறுவன ஊழியர் கள், அதிகாரிகள் பெரும் சந்தோஷப்பட்டனர். ஆனால், அது நிலைக்கவில்லை. இப்போது தான் அதன் உண்மையான சுயரூபம் தெரிந்துள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் விளைவு என்ன தெரியுமா? மொத்த சம்பளத்தில் வாங்கும் சலுகைப் பணம் எல்லாவற்றுக்கும் வரி கட்ட வேண்டும் என்பது தான்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தரப்படும் சில சலுகைகளை கம் பெனி ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் வரி கட்ட வேண்டும் என்பதால், அதில் இருந்து தப்பிக்க, ஊழியர்களிடமே வரி பிடித்தம் செய்கிறது. மாதச் சம்பளத்தில், டி.டி.எஸ்., பிடிக் கப்பட்டு விடுகிறது. ஆனால், வரி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று நினைத்து, தனியார் நிறுவனங்கள் தரும் இதர சலுகைகளுக்கு வரி பிடிப்பதில்லை. இனி அதற்கும் பிடிக்க வேண்டும் என்பது தான், வரி ஆணையத்தின் குறிக்கோள். அதை இப்போது நிறைவேற்றி உள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சி.டி.பி.டி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய வரி விகிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பின் சில அம்சங்கள்:
* கம்பெனி தரும் கார், அதை ஓட்ட நியமிக்கப்படும் டிரைவருக்கு தரும் சம்பளம் போன்றவை இதுவரை கம்பெனியே ஏற்று வந்தது; இனி இதற்கும் வரி உண்டு.
* சிறிய கார்கள் பயன்படுத்துவோரை விட, பெரிய கார்களை பயன்படுத்துவோருக்கு அதிக வரி பிடித்தம் செய்யப்படும்.
* வாடகைப்படியில் நகரங்களுக்கு ஏற்ப வரி பிடித்தம் செய்யப்படுகிறது. 7.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சம்பளத்தில் கணக்கிட்டு அதற்கு வரி பிடிக்கப்படும்.
* கம்பெனி தரும் கிரெடிட் கார்டு சலுகை, கம்பெனி பங்குகளை ஊழியர்களுக்கு சலுகை விலையில் தரும் "எஸாப்' சலுகைக்கும் கூட வரி உண்டு.
* குழந்தைகளுக்கு படிப்பு உட்பட கட்டண சலுகையை கம்பெனி தந்தால், அதற்கும் வரி உண்டு.
* விடுமுறை கால, சுற்றுலாச் செலவுகளை கம்பெனி ஏற்றாலும் அதற்கும் வரி பிடிக்கப் படும்.
* சென்னை உட்பட பெரிய நகரங்களில் வாடகைப்படி அதிகபட்சமாக 15சதவீத அடிப்படையில் தான் வரி வசூலிக்கப்படும்.
* கிளப்களில் உறுப்பினராக இருந்தாலும், அந்த கட்டணத் துக்கும் வரி பிடித்தம் உண்டு.
இந்த வரிப்பிடித்தம் பற்றி இப்போது தான் தெளிவுபடுத் தப்பட்டாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து விட்டதால், இந்த மாதத்தில் இருந்து மார்ச் வரை மூன்று மாதங்களின் சம் பளத்தில், மற்ற எட்டு மாதங்களுக்கும் சேர்த்து வரி பிடிக்கப்படும். அதேசமயம் கிராக்கிப்படி மற்றும் பிராவிடண்ட் பண்டுகளுக்கு கட்டப்படும் பணம் வரியில் இருந்து தப்பியது. ஏற்கனவே, எப்.பி.டி.,யில் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விட, ஒருவர் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கிறது. முன்பு சிதம்பரம் அமைச்சராக இருந்து அமல்படுத்தியதை விட, அதிக அளவு பிடித்தம் இந்த புது உத்தரவால் அமலாகிறது. கிட்டத்தட்ட 31 சதவீதம் வரை சம்பளத்தில் அதிகபட்சமாக இழக்க வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment