Thursday, December 17, 2009

கண்ணிவெடிகளை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டிக்​க​லாம்

 

 
வாஷிங்​டன்,​ நவ.17: மண்​ணில் புதைத்​து​வைக்​கப்​பட்​டுள்ள கண்​ணி​வெ​டி​களை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டித்து அமெ​ரிக்க விஞ்​ஞா​னி​கள் சாதனை படைத்​துள்​ள​னர்.

  அ​மெ​ரிக்​கா​வின் எடின்​பர்க் பல்​க​லைக்​க​ழக விஞ்​ஞா​னி​கள் இந்த சாத​னையை நிகழ்த்​தி​யுள்​ள​னர்.

  ஒ​ரு​வித நிற​மற்ற ரசா​ய​னத்​து​ட​னான ஒரு​வகை பாக்​டீ​ரியா கலந்த கரை​ச​லுக்கு கண்​ணி​வெ​டி​களை கண்​டு​பி​டிக்​கும் திறன் உண்டு என்​பதை அவர்​கள் நிரூ​பித்​துள்​ள​னர்.

   எங்​கா​வது கண்​ணி​வெ​டி​கள் இருப்​ப​தாக சந்​தே​கப்​பட்​டால் அந்த இடத்​தில் தற்​போது கண்​டு​பி​டித்​துள்ள பாக்​டீ​ரியா கரை​சலை தெளிக்க வேண்​டும். கண்​ணி​வெடி இருக்​கு​மா​னால் அந்த இடத்​தில் பச்சை நிற​மாக தோன்​றும்.

   இல்​லை​யேல் கரை​சல் எவ்​வித மாற்​றத்​தை​யும் உரு​வாக்​காது.

  இதை வைத்து ஒரு இடத்​தில் கண்​ணி​வெடி உள்​ளதா,​ இல்​லையா என்​பதை கண்​டு​பி​டித்​து​வி​ட​லாம் என்​கின்​ற​னர் அந்த விஞ்​ஞா​னி​கள். தற்​போ​தைய நிலை​யில் கண்​ணி​வெடி கண்​டு​பி​டிக்​கும் சோத​னைக்கு அதிக செல​விட வேண்​டி​யுள்​ளது.

   ஆனால் நாங்​கள் கண்​டு​பி​டித்​துள்ள பாக்​டீ​ரியா கரை​சல் சோதனை மூலம் குறைந்த செல​வில் கண்​ணி​வெ​டியை கண்​டு​பி​டித்​து​வி​ட​லாம்.

   அத்​து​டன்,​ கண்​ணி​வெ​டியை கண்​டு​பி​டிக்க உத​வும் ரசா​ய​னம் மற்​றும் பாக்​டீ​ரி​யா​வால் மனி​தர்​க​ளுக்கோ,​ விலங்​கு​க​ளுக்கோ எவ்​வித பாதிப்​பும் இல்லை என்​றும் அந்த விஞ்​ஞா​னி​கள் கூறி​னர்.

   உ​ல​கம் முழு​வ​தும் ஆண்​டுக்கு 15 ஆயி​ரம் முதல் 20 ஆயி​ரம் பேர் வரை கண்​ணி​வெ​டித் தாக்​குத​லில் பலி​யா​கின்​ற​னர் என்​பது தெரி​ய​வந்​துள்​ளது.

   இது வருத்​தம் அளிக்​கக்​கூ​டி​யது. இந்​நி​லை​யில் கண்​ணி​வெ​டித் தாக்​கு​தல் அதி​கம் நிக​ழும் நாடு​க​ளுக்கு எங்​க​ளது கண்​டு​பி​டிப்பு பெரிய அள​வில் பய​னுள்​ள​தாக இருக்​கும் என்று நம்​பு​கி​றோம் என்​றும் அந்த விஞ்​ஞா​னி​கள் தெரி​வித்​த​னர்.

source:dinamani

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails