இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பை வெளிநாட்டை சேர்ந்தவர்களும், கிறிஸ்தவர்களும் கொண்டாடலாம். கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தலாம். அதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்து கோவில்களை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை சிவராத்திரி விழாவைத்தவிர வேறு எந்த நாளிலும் கோவில்களை நள்ளிரவில் திறப்பதும் இல்லை. அபிஷேகம், பூஜை, தீபாராதனை என்று எதுவும் நடைபெறுவதும் இல்லை. ஆனால் வருகிற டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டுக்காக சில இந்து கோவில்களை திறக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம். முஸ்லிம் அமைப்புகள் வருகிற 31-ந்தேதி வேலூர் கோட்டையில் உள்ள மசூதிக்குள் அத்துமீறிச்சென்று தொழுகை நடத்தப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய நடவடிக்கையை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் மேற்கண்டவாறு வெள்ளையப்பன் கூறினார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment