Sunday, December 13, 2009

புலி தலைவர்களை கொல்ல உத்தரவிட்டது யார்? இலங்கை மாஜி தளபதி அதிர்ச்சி தகவல்

Front page news and headlines today : ""இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்திடம் சரண் அடைந்த நடேசன் உள்ளிட்ட புலித் தலைவர்களை சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே தான், உத்தரவிட்டார்,'' என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.



இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடுபவருமான சரத் பொன்சேகா "சண்டே லீடர்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி: இலங்கையில் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போர் நடந்தபோது, அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் நடேசன், புலித் தேவன், ரமேஷ் உள்ளிட்டோரும், அவர்களது குடும்பத்தினரும் சரண் அடைய முன்வந்தனர். ஆனால், இதுகுறித்த தகவல்கள் எதுவும், அப்போது போரை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த எனக்கு தெரிவிக்கப்படவில்லை.புலித் தலைவர்கள், நார்வே தலைவர்கள், அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே ஆகியோருக்கு இடையே தான், இந்த பேச்சுவார்த்தை நடந்தது. புலித் தலைவர்கள் சரண் அடைவது குறித்த விவரத்தை பின்னர் பசில் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபயா ராஜபக்ஷேயிடம் தெரிவித்தார்.



இதையடுத்து, சரண் அடையும் புலித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்றும், புலித் தலைவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொல்லும்படியும் கோத்தபயா ராஜபக்ஷே, ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஷவேந்திரா சில்வாவுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, அவர் கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். எந்த ஒரு நிலையிலும், இது குறித்து எந்த தகவலும் எனக்கு கூறப்படவில்லை.இவ்வாறு சரத் பொன்சேகா கூறியுள்ளார்.பொன்சேகாவின் குற்றச்சாட்டை இலங்கை மனித உரிமை துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே மறுத்துள்ளார்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails