கோவை : இன்டர்நெட் உலகில்,"ஆர்குட்' (சுய கருத்து பரிமாற்ற இணையதளம்) மூலம் குடும்பப் பெண்கள் எளிதாக ஏமாற்றப்படுவதாக, சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் ஐ.ஜி., பிரதாப்ரெட்டி தெரிவித்துள்ளார். மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற, "சைபர் சேப் தமிழ்நாடு -09' விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று, கோவையில் நடந்தது. மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
சி.பி.சி.ஐ.டி.,சைபர் கிரைம் ஐ.ஜி.,பிரதாப்ரெட்டி பேசியதாவது: கம்ப்யூட்டர், இன்டர்நெட் உலகில், எஸ்.எம்.எஸ்.,மூலம் 95 சதவீதம் பேர் ஏமாற்றப்படுகின்றனர். பெரும்பாலும் பல்வகை திறமை இருப்பவர்கள் தான், மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கல்லூரி மாணவர்கள், குடும்பப் பெண்கள் தான், "ஆர்குட்' மூலம் ஏமாறுகின்றனர்; தேவையில்லாமல் போட்டோக்களை இணைத்து ஏமாந்து விடுகின்றனர்.
ஆன்லைன் மூலம் கம்பெனிகளின் டேட்டாக்களை திருடி பயன்படுத்துவதும், அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் வியாபாரத்தில், வியாபாரிகள் கூட ஏமாற்றப்படுகின்றனர். ஆன் லைன் லாட்டரிகளில், லட்சங்களை இழப்பவர்கள் அதிகம். இமெயில் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள், இன்று ஏராளமாக நடக்கின்றன. சைபர் கிரைம் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழக்குகளை கையாளுதல், விசாரித்தல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல் பணிகளில் போலீஸ் அதிகாரிகள், சீரிய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment