Friday, December 25, 2009

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி


 

 

 



தாயின் கர்ப்பப்பையில் சிசு வளர்ந்து பத்து மாதங்கள் கழித்து ஜனிப்பது தெரிந்த விஷயம்தான். கர்ப்பப்பையில் குழந்தையின் வளர்ச்சி  எப்படி என்று தெரியுமா? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். குறிப்பாக குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் முப்பது  நாட்கள் வரை கருவின் நிலை தெளிவற்றதாகவே இருக்கும்.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு சிசுவின் வளர்ச்சியில் வேகம் தென்படுகிறது. கை,கால்கள் உருவாவதற்கான அடிப்படைக் குறிகள் இப்போது  தோன்றுகின்றன. மூளைப் பகுதியில் வளர்ச்சி ஏற்படுகின்றது. எட்டாவது வாரத்தில் தான் சிசுவுக்கு ஒரு தெளிவான உருவத் தோற்றம் உ ண்டாகிறது. அப்போது சிசுவின் வளர்ச்சி ஒரு அங்குலமாக இருக்கும்.

ஏழாவது வாரத்திலிருந்தே சிசுவின் உறுப்புகளில் இயக்க உணர்வு தோன்றி விடும். தசைகள் விரிந்து சுருங்கும் இயல்பினை பெற்றிருக்கும்.  அந்த சமயத்தில் மூக்குப் பகுதி உருவாகத் தொடங்கும். கை, கால்களில் விரல்கள் தோன்றிவிடும். கண்களின் பகுதி முழுமையடைந்தாலும் மூடியே இருக்கும். கருவில் உருவாகும் சிசு நான்காவது மாத வாக்கில் தனது கை விரல்களை நன்கு மடக்கி நீட்டக் கூடிய அளவுக்கு முன்னேற்ற கரமான வளர்ச்சியைப் பெற்று விடுகிறது. சிறுநீரகமும் உருவாகத் தொடங்கிவிடுகிறது. 

நான்காவது மாதத்தில் சிசுவின் உடல் வளர்ச்சி இரண்டு மடங்காகிறது. அதாவது அதன் உடலின் நீளம் நாலரை அங்குலமாகி விடுகிறது.

அதற்குப் பிறகு சிசுவின் எலும்புகளில் நல்ல வளர்ச்சி காணப்படும்.

ஐந்து, ஆறு மாதங்களில் சிசுவின் தலையில் முடி வளரத் தொடங்கி விடுகிறது. ஆனால் அதன் கண்களில் பெரிய மாறுதல்கள் ஏற்படுவதி ல்லை.

சிசு பிறக்கும் காலத்திற்குச் சற்று முன்தான் கண்களின் சீரான வளர்ச்சி. கண்களின் நிறம் ஆகியவற்றைக் காண முடிகிறது.

தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியேறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உணர்ச்சி, அவை உணரும் உறுப்புகள் ஆகியன இயக்கம்  பெறுகின்றனவாம்.

ஏழு மாதங்கள் கடந்து சில நாட்கள் ஆனதும்,எலும்புகள் மற்ற உறுப்புகளின் வளர்ச்சி அனேகமாக முழுமை பெறுகிறது.

இப்படியாகக் கருவில் நடைபெறும் சிசுவின் வளர்ச்சி இயக்கத்தின் கால அளவு, அதாவது கரு உருவான பின் சிசுவின் கர்ப்ப வாச காலம்  266 நாட்களாகிறது. 


source:dinakaran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails