நியூயார்க் : மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, வரும் 2025ம் ஆண்டில் சீனாவை முந்தும் என ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகை கணக் கெடுப்பு நிறுவனம், உலகில் உள்ள 227 நாடுகளில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வில் வரும் 2025ம் ஆண்டில் இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் சீனாவை முந்தும் என்று தெரிவித் துள்ளது.
ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் இப்போது 1.4 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி சீனாவை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இதே வேகத்தில் சென்றால், 2025ல் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும். ஒவ்வொரு பெண்ணும் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால், இந்தியாவில் இதன் சராசரி விகிதம் 2.7 ஆக உள்ளது. இந்த விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது என்றாலும், மிகவும் மிதமாகவே குறைய ஆரம்பித் துள்ளது. இதனால், மக்கள் தொகை பெருக் கத்தை கட்டுப்படுத்த பெரிய அளவில் பயன் இருக்காது. அதே சமயம், சீனாவில் பிறப்பு வளர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவை விட குறைவாக இருக்கும் சீனாவில், 1990ம் ஆண்டில் இது 2.2 சதவீதமாக இருந்தது; 1995ல், 1.8 ஆக குறைந்தது. 2000ம் ஆண்டில் இந்த விகிதம் 1.6 க்கு குறைந்து விட்டது
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment