Wednesday, December 23, 2009

சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும்


ஹர்சிம்ரன் சிங் புதுடெல்லி கம்ப்ïட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள், புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய சிறிய வகை மடி கம்ப்ïட்டர்களை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளன. இதனையடுத்து `நெட்புக்' என்றழைக்கப்படும் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் பெரும் எழுச்சி ஏற்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இந்த கம்ப்ïட்டர்கள் `மினி நோட்புக்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. முதன் முதலில்... `லேப்டாப்' என்றழைக்கப்படும் மடி கம்ப்ïட்டர்கள் பேட்டரியில் இயங்கக் கூடியவை. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்லக்கூடிய இந்த கம்ப்ïட்டர்களை தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் பயன்படுத்து கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தைவான் நாட்டைச் சேர்ந்த பிரபல கம்ப்ïட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ.எஸ்.யு.எஸ்., சிறிய வகை மடி கம்ப்ïட்டரை முதன் முதலில் உருவாக்கியது. அளவில் சிறிய, எடை குறைவான, சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பெரும்பாலும் இணையதளத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கத் தொடங்கவில்லை. எனினும் அடுத்த ஒரு சில ஆண்டு களில் இப்பிரிவு அபார வளர்ச்சி காணும் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் தீப்தரூப் சக்ரவர்த்தி கூறும்போது, "ஒரு வாடிக்கையாளர் முதன் முதலாக கம்ப்ïட்டர் வாங்கும்போது, மடி கம்ப்ïட்டரை விரும்புவதில்லை. எனவே இது இரண்டாவது தேர்வாகத்தான் உள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடு களில் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள், சாதாரண கம்ப்ïட்டருக்கு அடுத்த இடத்தில்தான் உள்ளன. சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் `நெட்புக்'குகளின் பங்களிப்பு 20 சதவீத அளவிற்கே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, பல இல்லங்களில் சாதாரண கம்ப்ïட்டரே இல்லை. எனவே மடி கம்ப் ïட்டர்கள் பயன்பாடு மெதுவாகத்தான் வளர்ச்சி காணத் தொடங்கும்'' என்று தெரிவித்தார். சாதாரண கம்ப்ïட்டர் இந்தியாவில் இன்று சாதாரண கம்ப்ïட்டர் பயன்பாடு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் (ஜுலை-செப்டம்பர்) நம் நாட்டில் மொத்தம் 21.80 லட்சம் சாதாரண கம்ப்ïட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இதில், மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை 7.30 லட்சம் என்பது கவனிக்கத்தக்கது. ஆனாலும் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனை 70,000 என்ற அளவில்தான் இருந்தது. எனினும் வரும் 2010-ஆம் ஆண்டில் இவற்றின் விற்பனை 3,25,000-ஆக உயரும் என கார்ட்னர் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதே சமயம் சர்வதேச அளவில் விற்பனை 6 கோடியாக அதிகரிக்கும் என ஏ.பீ.ஐ. ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. விற்பனை சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்களைப் பெற்றுள்ளன. விலையும் குறைவாக உள்ளது. டெல், எச்.பி., ஏசர், எச்.சி.எல். மற்றும் லினோவா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய வகை மடி கம்ப்ïட்டர்களை தயாரித்து அளித்து வரு கின்றன. நடப்பு 2009-ஆம் ஆண்டில் இதுவரை, 1,35,000 சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையாகி உள்ளன. உள்நாட்டில் தற்போது சிறிய மடி கம்ப்ïட்டர் ஒன்றின் விலை சுமார் ரூ.20,000-ஆக உள்ளது. உயர்ந்த பிராண்டு சிறிய வகை மடி கம்ப்ïட்டர் ஒன்று ரூ.15,000 என்ற விலையிலேயே கிடைக்கிறது. மின்சாரம் தற்போது சிறிய வகை மடி கம்ப்ïட்டர் ஒன்றில் உள்ள பேட்டரி 7-8 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கூடியது. இவ்வகையில், பெரும்பாலான கம்ப்ïட்டர்கள் 10 அங்குல திரையைக் கொண்டுள்ளன. சில மாடல்கள் 12 அங்குல திரையைக் கொண்டுள்ளன. பொதுவாக வழக்கமான மடி கம்ப்ïட்டர்கள் 1.50 முதல் 2 கிலோ வரை எடை உள்ளதாக இருக்கும். அதே சமயம் `நெட்புக்' ஒன்றின் எடை 1.30 கிலோவாக உள்ளது. ஒரு நுகர்வோர் மடி கம்ப்ïட்டர் ஒன்றை வாங்கும் போது அதன் எடை மிகவும் குறைவாக இருப்பதையே விரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில், மடி கம்ப்ïட்டர்கள் விற்பனையில் சிறிய வகை கம்ப்ïட்டர்களின் பங்களிப்பு 10 முதல் 11 சதவீதமாக உள்ளது. சாதாரண கம்ப்ïட்டர்களை விஞ்சி இவற்றின் ஆதிக்கம் வலுப்பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என லினோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமர் பாபு கூறினார். எனினும் தற்போது, பல நகரங்களில், குறிப்பாக நடுத்தர நகரங்களில் சிறிய மடி கம்ப்ïட்டர்கள் பயன்பாடு உயரத் தொடங்கியுள்ளது. எனவே, முதல் தேர்வாக சிறிய வகை மடி கம்ப்ïட்டர்கள் உருவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே பல நிறுவனங்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
source:dailythanthi
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails