மதம் ஒரு பொருட்டே அல்ல தகுதி இருந்தால் இஸ்லாமியர் இந்தியாவில் பிரதமர் ஆகலாம்; ராகுல் காந்தி சொல்கிறார்
அலிகார், டிச. 7-
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். விழாவில் அவர் மாணவ-மாணவிகள் சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு மாணவர் எழுந்து, இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இஸ்லாமியர் ஒருவர் பிரதமர் ஆக முடியவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், இந்த விஷயத்தில் மதம், இனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை ஒருவரது தகுதிதான் முக்கியம். இன்று மன்மோகன்சிங் பிரதமராக இருக்கிறார் என்றால் அவர் சீக்கியர் என்பதற்காக அல்ல. அவர் தகுதியும், திறமையானவரும் என்பதால்தான் பிரதமராக இருக்கிறார். இஸ்லாமியர் ஒருவர் முழுமையான தகுதி பெரும் பட்சத்தில் அவர் இந்தியாவில் பிரதமராக முடியும்.
சீக்கியர்கள் நமது மக்கள் தொகையில் மிகமிக குறைவு தான். தங்கள் இனத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வருவார் என்று அவர்கள் கற்ப்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். அது போல இஸ்லாமியர்களும் அரசியலில் அதிக அளவில் ஈடுபட்டால் உயர் பதவிகளை எட்ட முடியும் என்றார்.
source:maalaimalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment