புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதம் மட்டும், 692 இணையதளங்கள் (வெப்சைட்கள்)அழிக்கப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின்,கம்ப்யூட்டர் அவசர ஆய்வு குழு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.இத னால், அந்த குழு, அரியானா மற்றும் உ.பி., ஆகிய மாநில அரசுகள் தங்களின் இணையதளங்களை தாங்களே பாதுகாத் துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணைய தளங்கள் குறிப்பாக ரகசிய தகவல்கள் அடங்கிய இணையதளங்களை பாதுகாக்க, பராமரிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அனைத்த மாநில அரசுகளையும் கேட்டுள்ளோம். பொதுவாக டாட்காம், டாட்இன்,டாட்கவுட், டாட்எஜூ உட்பட அனைத்து வகை இணையதளங்களுமே, இவ்வாறு பாதிக்கப்படுகின்றன.
டாட்இன், பிரிவை சேர்ந்த 511 இணையதளங்கள் இவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளன. டாட்காம் பிரிவை சேர்ந்த 20 சதவீதம் இணையதளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில் 63 தாக்குதல்கள் இதுவரை தெரிவிக்கப் பட்டுள்ளன. இதில் 23 தாக்குதல்கள் சீனாவில் இருந்து நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, இணையதளங்களை தாக்குவது என்பது பல முறைகளில் நடத்தப்படுகிறது. இதில், இணையதளங்களின் நிர்வாகிகளின் பாஸ்வேர்டுகள் திருடுவதே பொதுவாக நடைபெறுகிறது.
மற்றொரு முறையில் பைல் டிரான்ஸ்பர் புரோட்டகால் அல்லது வெப் சர்வரில் நுழைந்து, அதை அழித்துவிடுவது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி மையங்களின் இணையதளங்களே அழிக்கப்படுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. "இது தொழில்நுட்ப துறை என்பதால், இவற்றை விசாரிக்க, நிபுணர்கள் அவசியம். இந்த நெருக்கடியை தற்போது எங்களால் சமாளிக்க முடியவில்லை. மேலும், பயிற்சிகள் எடுத்துக் கொள்ளுவது இவ்வாறான வழக்குகளில் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment