Sunday, December 13, 2009

கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்

 
lankasri.com
கூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் போடுங்கள்.

கூகுல் தனது லோகோவை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.இந்த சித்திரங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன் கூகுல் லோகோ சித்திரத்திற்கான ஒரு போட்டியை அறிவித்தது.இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் குர்கோவன் நகரைச்சேர்ந்த புரு பிராதாப் சிங் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் உருவாக்கிய சித்திரமே கூகுல் இந்திய முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த சித்திரம் முகப்பு பக்கத்தில் நாள் முழுவதும் காட்சியளிக்கும்.

lankasri.com 


புரு இந்தியாவின் தேசியப்பறவையான மயில் ,மற்றும் அம‌ர் ஜவான் ஜோதி ஆகியவற்றை கொண்டு லோகோவை வடிவமைத்துள்ளார்.கூகுலில் உள்ள ஒ என்னும் எழுத்தை நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய சாதனையாக வரைந்துள்ளார்.

நமது காலாச்சாரம் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் இந்த லோகோ பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுள்ளது பொருத்தமானது தான்.

பல்வேறு மதங்களின் சங்கமமாக இருப்பதே இந்த தேசத்தின் சிறப்பமசம் என்று அவர் பெருமிதத்தோடு கூறிப்பிட்டுள்ளதும் பாரட்டத்தக்கது

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails