நுகர்பொருள் உற்பத்தியில் சீனாவை விஞ்சும் இந்தியா
புதுடில்லி : "டிவி' மொபைல்போன் போன்றவற்றை தயாரிப்பதில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீனாவை, விரைவில் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என்று, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களில் 54 சதவீதம் ஏற்றுமதியாகிறது.உலகத் தரம் வாய்ந்த "ஏசி' தயாரிப்பில் 72 சதவீதம்; குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிப்பில் 47 சதவீதம்; "டிவி'க்கள் தயாரிப்பில் 45 சதவீதம்; வாஷிங்மெஷின் தயாரிப்பில் 35 சதவீதம்; மொபைல்போன் தயாரிப்பில் 52 சதவீதம் என்று சீனா இப்போது வெளுத்து வாங்குகிறது.இதற்கு அந்நாட்டு அரசு கடைபிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என்கின்றனர். நேரடி வெளிநாட்டு முதலீட்டை(எப்.டி.ஐ.,) அவர்கள் பெருமளவில் வரவேற்கின்றனர். இதனால் தொழில்நுட்பம் எளிதில் கிடைக்கிறது.தேசிய உற்பத்திப் போட்டி கவுன்சில் மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில், "இந்நிலைமை வெகு சீக்கிரத்தில் மாறும்' என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,"சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் நுகர்பொருள் சந்தை இருக்கிறது. தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்கமளித்தல், நுகர்பொருள் தேவை அதிகரிப்பதை சரியான முறையில் கணித்தல், வரிக் கொள்கைகளில் சற்றே விட்டுக் கொடுத்தல், மூலப்பொருட்கள் வினியோகத்தை மேம்படுத்தல் இவற்றைச் சரியாக செய்தால் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவின் இடத்தை இந்தியா பிடித்துவிடலாம்' என்று கூறப்பட்டுள்ளது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment