Friday, December 25, 2009

மூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்

 


1  

இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை "ஓவர் லோடு' செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.
கடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக <உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,"அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது' என்கிறார். "பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல்போனில் பேசவும், "டிவி' பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்' என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.
"கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்' என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails