கம்பாலா(உகாண்டா):உகாண்டாவில், ஓரினச் சேர்க்கையாளர்களான, "கே'க்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
அச்சட்டத்தில், "ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவளித்தால், ஊக்குவித்தால், முயன்றால், அவர்களுக்கு வீடுகள், அறைகள் வாடகைக்கு விட்டால் ஏழு ஆண்டுகள் சிறை; மத, அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் உள்ளவர்கள் அவர்களைப் பற்றி தெரிந்திருந்தும் தகவல் சொல்லாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை; எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ள, "கே'க்களுக்கு மரண தண்டனை' என்று கடுமையான விதிகள் போடப்பட்டுள்ளன.இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் உகாண்டாவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். பெரிய தொழிலதிபர்களும் சிறைக்குப் போக வேண்டி வரும்.இதை எதிர்த்து அந்நாட்டு ஓரினச் சேர்க்கையாளர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தரப்பில்,"இந்த மசோதா, உலகளவில் கடும் எதிர்ப்பை சம்பாதிக்கும். எய்ட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் பின்னடைவை உண்டாக்கும்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் வலுவான நிலையில் இருப்பதால் இச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம்' என்று தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், அமெரிக்காவின் கன்சேர்வேடிவ் கட்சியின் கிறிஸ்தவ அமைச்சர்கள் சிலர், "ஓரினச் சேர்க்கையாளர்களை சராசரி உணர்வுள்ளவர்களாக மாற்ற சிகிச்சை அளிக்கலாம்' என்று யோசனை தெரிவித்துள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள, "கே' ஆர்வலர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி வருகின்றனர். தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த மாதம் நியூயார்க்கிலும் வாஷிங்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment