Tuesday, December 22, 2009

சமுத்திரமும் அலைகளும்

 

லூக்கா 21-ம் அதிகாரம் 25-ம் வசனம்இவ்வாறாக சொல்கிறது "சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்;சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்." அதற்கேற்ப இன்றைய செய்திதாள்களும் இதையே சொல்கின்றன.

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கடல்களில் இரைச்சல் அதிகரிப்பு
பாரீஸ்: அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக கடல்களில் இரைச்சல் அதிகரித்திருப்பதாக அமெரிக்க நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடல்களில் ஒலியின் அளவு அதிகரித்திருப்பது திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக அமையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மழை, அலைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒலியின் அளவு மிக மிக குறைவான வீச்சைக் கொண்டதாகும். அதேபோல சோனார் கருவிகளிலிருந்து வெளியாகும் ஒலி, கப்பல் போக்குவரத்து, கடலில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவும் கடலில் ஒலி அலைகள் பரவுகின்றன.

ஆனால் இந்த ஒலியை, நீரில் இயற்கையாக காணப்படும் வேதிப் பொருள் உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறதாம். இந்த வேதிப் பொருட்கள் தற்போது கடல்களில் குறைந்து வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு.

அமிலமயமாக்கல் காரணமாக கடல் நீரில் இந்த வேதிப் பொருளின் அடர்த்தி குறைந்து வருகிது. இதற்கு முக்கியக் காரணம் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்திருப்பதே.

அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்தே கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த 40 ஆண்டுளில் கடலில் கப்பல் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம்.

இப்படி கடல் நீர் மாசுபட்டு வருவதால், அதில் உள்ள வேதிப் பொருள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடல்களில் தற்போது ஒலியின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் விலங்குகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று முடிக்கிறது அந்த ஆய்வு.
http://thatstamil.oneindia.in/news/2009/12/22/us-eco-slow-down-10-needs-more.html

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails