Friday, December 18, 2009

ஆப்பிள் நிறுவனம்:உங்களுக்குத் தெரியுமா?


உங்களுக்குத் தெரியுமா? 

*ஆப்பிள் நிறுவனம் தொடக்கத்தில் தான் வடிவமைத்த கிராபிகல் யூசர் இன்டர்பேஸ் வழி தோற்றங்களை, மற்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடுத்தது. இது போல கம்ப்யூட்டரில் தான் கொண்டுவந்த பல முதல் விஷயங்களை மற்றவர்கள் உருவாக்கிப் பயன்படுத்தக் கூடாது என வாதிட்டது. இதன் அனைத்து வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒன்று மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதனை மற்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டது. அது ஆப்பிள் உருவாக்கிய ட்ரேஷ் என்ற ஐகானாகும். பைல்களை அழித்த பின் வைக்கப்படும் போல்டரை அது குறித்தது. இதற்கான காப்பிரைட் உரிமையை ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமே கோர்ட் வழங்கியது. அதனால் தான் மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் சிஸ்டத்தில் ரீசைக்கிள் பின் என அதனைக் குறிப்பிட்டது.



* விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டாஸ்க் பார் என்ற அமைப்பினைத் தன் விண்டோஸ் 95 தொகுப்பின் காலத்திலிருந்து தொடர்ந்து மைக்ரோசாப்ட் கொண்டிருந்தது. இதன் வடிவமைப்பு விஸ்டா வரை மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இப்போது வந்துள்ள விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இது சிறிது மாற்றப்பட்டுள்ளது.
*பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கும் ரைட் கிளிக் மெனுவினை மாற்றலாம். மெனு எடிட்டர் மூலம் மாற்றி, நமக்கு அதிகம் தேவையில்லாத "Send Link" அல்லது "Copy Email Address"  போன்றவற்றை இல்லாமல் அமைத்திடலாம். இது கொஞ்சம் வசதியாய் இல்லை!
*ஏதாவது ஒரு பெயரைப் பார்த்தவுடன் இந்த பெயரில் ஒரு வைரஸ் உள்ளதே என்று சந்தேகமா? அல்லது இது ஒரு பழைய வைரஸ்; இப்போ இதெல்லாம் வருவதே இல்லை என்று ஒரு சிந்தனை ஓடுகிறதா? செக் செய்து கொள்ள http://redirectingat. com/?id=951 X490024&url= http%3A%2F%2Fen. wikipedia.org %2Fwiki%2FTimeline_of_ notable_computer_viruses _and_worms  என்ற முகவரியில் உள்ள விக்கிபீடியா தளத்தைப் பார்க்கவும். முதல் முதலில் வந்த வைரஸ் தொடங்கி இன்று வரை உள்ள குறிப்பிடத்தக்க வைரஸ்கள், வோர்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails