வாஷிங்டன்:அமெரிக்க படைகள் மீது அல்-குவைதா மற்றும் தலிபான் தலைவர்கள் தாக்குதல் நடத்த முயன்றால், பாகிஸ்தானுக்குள் புகுந்து அவர்களை தாக்குவோம் என, அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.இது குறித்து "டிவி' பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:பாகிஸ்தானின் எல்லை பகுதியில் தலிபான்களும், அல்-குவைதா பயங்கரவாத தலைவர்களும் பதுங்கியுள்ளனர். இவர்களை ஒடுக்க முந்தைய காலத்தை விட பாகிஸ்தான் எங்களுக்கு தற்போது கூடுதல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
பாக்., ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதி அருகே அதிகம் கவனம் செலுத்துவதை விட்டு, மேற்கு பகுதியில் இந்த பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சி எடுக்க வேண்டும். ஏனென்றால், பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்தில்லை.ஒவ்வொரு நகரங்களிலும் தற்கொலைப் படை தாக்குதலை நடத்தி வரும் பயங்கரவாதிகளால் தான் ஆபத்து அதிகம். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அமெரிக்கர்களை விட பாகிஸ்தானியர்கள் தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இதை பாகிஸ்தானிடம் நாங்கள் வற்புறுத்தி சொல்லி வருகிறோம்.
பாகிஸ்தான் எல்லை பகுதியில் முகாமிட்டுள்ள அல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை தாக்க முயற்சித்தால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் தொடர்ந்து இருப்பது குறித்த நிலவரம் அடுத்த ஆண்டு இறுதியில் தெரியவரும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment