Monday, December 21, 2009

இஸ்லாமிய முக்கிய பேச்சாளருக்கு சுவிற்சர்லாந்து நுழைய தடை


நேற்று சனியன்று பேர்ன் நகரில் முஸ்லிம் மக்களால் நடத்தபட்ட எதிர்ப்பு ஒன்றுகூடலில் முக்கிய பேச்சாளராக கலந்து கொள்ளவிருந்த ஜேர்மனியை சேர்ந்த அபு ஹமாசா என்று அழைக்கபட்டும் Pierre Vogel சுவிற்சர்லாந்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.

 

 இவரது பேச்சு சுவிற்சர்லாந்தில் பொதுஜன அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி குடிவரவு அலுவலகத்தால் இவருக்கான பயணத்தடை விதிக்கபட்டது.

 

இப்பயணத்தைடை நடவடிக்கையை சுவிஸ் மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. இந்நடவடிக்கைக்காக சுவிஸ் நீதியமைச்சர் எவலின் விட்மரை பாராட்டுகிறேன் என்று சுவிஸ் மக்கள் கட்சியின் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் லூக்காஸ் றைன்மான் தெரிவித்தார்.

 

தனது நுழைவு அனுமதி மறுக்கபட்டது குறித்து கருத்த தெரிவித்த அபு ஹமாசா தனது பேச்சு பொதுஜன பாதுகாப்பக்கு அச்சுறுத்தல் என்று தெரிவிக்கபட்ட குற்றச்சாட்டை மறுத்ததுடன் என்றுமே தனது நடவடிக்கை வன்முறையை ஆதரிப்பதாக அமைந்திருக்கவில்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்


source:swissmurasam


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails