Wednesday, December 16, 2009

கண்ணீரே ஒரு கிருமிநாசினி!

பொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர்களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா?
ஆம், நிச்சயமாக, அழாத குழந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி. மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும். லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படுகிறது. இனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.

source:dinakaran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails