இன்டர்நெட் தேடல்கள் இன்று அறிவியல் தாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. அவ்வகையில் சென்ற செப்டம்பர் மாதம் இன்டர்நெட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகள் முன்னணியில் இருந்தன.
ஏறத்தாழ 3 ஆயிரத்து 60 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்டவற்றைக் காட்டிலும் 33% கூடுதலாகும். சராசரியாக ஒரு பயனாளர் இந்த மாதத்தில் மேற்கொண்ட தேடல்கள் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தேடல்களில் 44% கூகுள் சர்ச் இஞ்சின் வழியாக மேற்கொள்ளப்பட்டன. இதன் வழியாக 1,700 கோடி தேடல்கள் நடந்தன. இது மொத்தத்தில் 44.1 % ஆகும். அடுத்ததாக Baidu.com என்ற தேடுதல் (21.3%)தளம் இடம் பெற்றுள்ளது. மூன்றா வதாக யாஹூ 13.8% பங்குடன் 530 கோடி தேடல் களைக் கொண்டி ருந்தது. ஆனால் ஹாங்காங் மற்றும் தைவானில் அதிக தேடல்கள் யாஹூ தளம் வழியாகவே மேற்கொள்ளப்பட்டன.
மேலே தரப்பட்ட தேடல் தகவல்கள் அனைத்தும் 15 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொண்ட தேடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். பொது இன்டர்நெட் மையங்கள் மற்றும் பிடிஏ சாதனங்கள் வழி மேற்கொள்ளப்பட்ட தேடல்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment