கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர் வைரமுத்து பவானி. தனது உறவினர் ஒருவரின் திருமணச் சடங்கிற்காக மூன்று வருடங்களின் முன்னர் வடக்கிற்கு அவர் போயிருந்தார். கடந்த செப்டெம்பர் மாதம் வரையில் அவரால் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வர முடியவில்லை; வடக்கில் நடைபெற்ற போரில் சிக்கிக்கொண்டார். குண்டுத் தாக்குதலால் தன்னுடைய குடும்பத்தில் 6 உறுப்பினர்களையும், தனது கால்கள் இரண்டையும் அவர் பறிகொடுத்துவிட்டார்; அந்த நிலையிலும் பல மாதங்களை, மக்கள் நிரம்பி வழிந்த தடுப்பு முகாம்களில் அவர் கழிக்க வேண்டி இருந்தது. இப்போதும் கூட - அரச அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் வாழ்கிறார். தடுப்பு முகாமிலிருந்து அவர் கிழக்குக்குத் திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கிறார்கள் என பவானி கூறுகிறார். "வன்னியில் நான் எங்கு போனேன், அங்கு என்ன செய்தேன் என்பது பற்றி அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்" என்றார் பவானி. அவருக்கு 25 வயதாகிறது; தனது சகோதரியின் வீட்டுத் தரையில் அமர்ந்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்; சோர்வையும் சலிப்பையும் விரட்டுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார். போருக்குப் பின்னரான சிறிலங்காவில் அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையைக் கட்டி எழுப்ப அல்லல்படும் இலட்சக் கணக்கான மக்களில் ஒருவர் தான் பவானி. வைரமுத்து பவானி [ படம் - நன்றி: Associated Press ] அமெரிக்காவி்ல் வெளிவரும் The Philadelphia Inquirer ஏட்டிற்காக Associated Pressநிறுனத்தின் எரிக்கா கினெட்ஸ் [ Erika Kinetz ] எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக் கட்டுரையி்ல் மேலும் எழுதப்பட்டுள்ளதாவது: கடந்த மே மாதத்தில் அந்தப் போராளிகள் தோல்வியடைந்த பின்னர், சனக் கூட்டத்தால் நிரம்பி வழிந்த முகாம்களில் சிறிலங்கா அரசு மக்களை மந்தைகள் போன்று அடைத்து வைத்தது. அவர்களுடன் பல போராளிகளும் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, முகாம்களை ஜனவரி மாத இறுதியில் மூடிவிடுவதாக சிறிலங்கா அரசு அறிவித்தது. அவர்களது வீடுகளுக்குப் படை அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்கிறார்கள். பெரும்பாலும் பௌத்தர்களை உள்ளடக்கிய பெரும்பான்மையினரால் தாங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் எனத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாக முறையிட்டு வருகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். சண்டை நடைபெற்ற பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற மக்கள் போராளிகளால் சுடப்பட்டார்கள் என்றும் தமது பிள்ளைகள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 34 வயதான அவர், கடந்த ஒக்டோபரில் தான் தனது சகோதரியின் வீடு அமைந்துள்ள துறைமுக நகரான திருகோணமலைக்குத் திரும்பி இருக்கிறார். பிள்ளைகளைப் பிடித்துச் செல்ல போராளிகள் வந்த போது - தனது குழந்தைகளை ஒரு குழிக்குள் மறைத்து வைத்து, அதன் மேல் இரும்புத் தகடு ஒன்றைப் போட்டு மூடி - அந்த இரும்புத் தகட்டுக்கு மேலே உலைப் பானையை வைத்து அவர் மறைத்துள்ளர். ஒரு நாள் இரவு தமது கூடாரத்திற்கு அருகில் இருந்த கூடாரத்திற்கு வந்த பேராளிகள், அங்கிருந்த சிறுவனைப் பிடித்துச் செல்வதற்குத் தடையாக இருந்த அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றனர் என்று ராஜ்வதனி கூறுகிறார். அப்போது - அங்கிருந்தர்கள் எல்லோரும் - தமது கைகளில் கிடைத்த தடிகளை எடுத்துக் கொண்டு போராளிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினர். இந்தக் குழப்பம், கொந்தளிப்புகளுக்கு நடுவே ராஜ்வதனியின் குடும்பம் நீரேரியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பி வந்தது. தனது வீட்டில் இருப்பது குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறார் ராஜ்வதனி; சுற்றிவர மதில் சுவர்கள் கட்டப்பட்ட அந்த வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தங்கி இருக்கிறார். அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே இருப்பதை அவரால் நிறுத்தவே முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கில் போர் முடிந்துவிட்ட போதும் கூட - தமது இடங்களுக்குத் திரும்பியதில் இருந்து, மிகச் சிலரால் மட்டுமே வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை இங்கு பெற முடிந்துள்ளது; அதிலும் பெண்களின் நிலை மிகச் சிரமமானது. கடந்த ஓகஸ்ட் மாதம் சசிகலா திரும்பி வந்தார்; அவரது கணவர் வரவில்லை. இப்போது அவரும் இரண்டு குழந்தைகளும் நிவாரண உணவை நம்பியும் அவரது சகோதரியின் உதவியை நம்பியுமே வாழ்கிறார்கள். ஏனென்றால் - "அந்த தையல் இயந்திரங்களை இயக்குவதற்குக் கால்கள் வேண்டுமே...". தொடர்பான செய்திகள்: முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை... படங்களால் ஒரு செய்தி: வளமான மண்ணிலிருந்து வரண்ட நிலத்திற்கு 11,000 முன்னாள் புலிகள் சிறையில்: 200 பேருக்கு விசாரணை; மிகுதி எல்லோருக்கும் விடுதலையாம் source:puthinappalakai |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment