Monday, December 14, 2009

விஜய் டி.வி.யில் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கேரல் பாட்டு போட்டி “ஆச்சி” மசாலா நிறுவனம் ஏற்பாடு

 
 சென்னை, டிச.13-
 
கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வருகை குறித்து பாடகர் குழுவினர் "கேரல்" பாடும் முறையை, ஆச்சி நிறுவனத்தினர் ஒரு பாட்டு போட்டியாக தேவாலயம், கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களில் இருந்து வரும் பாடகர், குழு வினரை வைத்து தொலை காட்சியில் பாட ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக் தெரிவித்தார்.

இந்த முயற்சி, பத்மசிங் ஐசக்கின் மனைவி தெல்மா ஐசக் மற்றும் மகன்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம் ஆகியோருடைய 2 ஆண்டு கால முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலமாக முதல் முறையாக வரும் 24 மற்றும் 25-ந்தேதி ஒளிபரப்பு ஆகியது. இந்த நிகழ்ச்சியை இலங்கை, அமெரிக்கா, கனடா நாடுகளிலும் பார்க்க முடியும்.
 
இந்த போட்டியில் வெற்றி யாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி 12-ந் தேதி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் சாமுவேல் ஜோசப், சிட்டி பிரகாஷ் தைரியம், சுசீலாசாரதி, சாந்தி சால மன், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
 
முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு பிரிவு குழுவுக்கும், ரூ.20 ஆயிரம் 2-ம் பரிசாக ஒவ்வொரு பிரிவு குழுவுக்கும் கொடுக்கப்படும். நிகழ்ச்சிக்கும் பேராயர் தேவசகாயம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார்கள்.

source:dinamalar



--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails