Tuesday, December 15, 2009

பழைய செய்திகள் புதிய உண்மைகள்

  நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது


உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும்.

வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும்.

நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன.

 உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. புல்லின் மீது வைக்கும்போது அது பச்சையாக மாறுவதில்லை. கட்டம் போட்ட துணி மீது அது நகர்ந்து செல்லும்போது பதற்றமடை வதில்லை. இருக்கும் பதினாறு வகை பச்சோந்தி பல்லி களில், பல தங்களின் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களது வண்ணத்தை மாற்றிக் கொள் கின்றன. மரப்பட்டையைப் போன்று சில இருக்கும் பழுப்பு நிறத்தில் சில இருக்கும். மற்றவை தாவர இலைகள் போன்று பச்சை நிறத்தில் இருக்கும்.

தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்ள இயன்ற சிறப்பான ஆற்றலை அவை பெற்றிருக்கின்றன. என்றாலும், இதற்கும் அவற்றின் சுற்றுச் சூழல் வண்ணங் களுக்கும் ஏதும் தொடர்பு இல்லை. வெப்ப நில, ஒளி மற்றும் அப்பிராணியின் உணர்வு நிலை ஆகியவையே அவற்றின் வண்ண மாற்றத்துக்கான காரணங்கள். சில பச்சோந்தி களுக்கு கோபம் வரும்போது அவை கறுப்பாக மாறிவிடு கின்றன. மற்றவை உணர்ச்சி வசப்படும்போது, மஞ்சள் புள்ளிகள் கொண்ட பச்சை நிறத் தோலைக் கொண்டிருக்கும்.

நம்பிக்கை: கண்ணாடிப் பாம்புகள் உண்மையி லேயே பாம்பு வகையைச் சேர்ந்தது

உண்மை: இது உண்மையில் கால்களற்ற பல்லி வகை ஆகும். ஆனால் அது நகர்வதைப் பார்க்கும் போது பாம்பைப் போலவே தோற்றமளிக்கும். அவைகளுக்கு காதுகளும் நகரக்கூடிய கண்விழி களும், உண்டு. பாம்புகளுக்கு காதுகளும், நகரக் கூடிய கண்விழிகளும் கிடையாது. எனவே இவை பல்லி இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நம்பிக்கை: முதலைகள் பல நூறாண்டுகள் காலம் வாழ இயன்றவை


உண்மை: பார்வையாளர்கள் காணும் முதலையின் வயது நூறு என்று அவர்களுக்கு உலகின் பல்வேறு பகுதி களிலும் உள்ள பாம்புக் காட்சிகளில் சொல்லப்படலாம். அது வியாபாரப் பேச்சே அன்றி, அறிவியல் தகவல் அல்ல. 50 ஆண்டுகளுக்கு மேல் முதலைகள் வாழ்வதில்லை.

நம்பிக்கை: பாம்புகள் தங்கள் நாக்குகளால் கொட்டுகின்றன.



உண்மை: நச்சுப் பாம்புகள் தங்களின் நச்சுப் பற்கள் மூலமாகவே கொட்டுகின்றனவேயன்றி, நாக்கினால் கொட்டுவதில்லை. அவற்றின் நச்சுப் பைகளில் உள்ள நஞ்சு மேல் தாடையில் உள்ள குழி அல்லது பைகளில் இருந்து நச்சுப் பல் மூலம் பாய்ச்சப்படுகிறது. தங்கள் இரையைத் தேடிச்செல்ல உதவும் பொருள்களின் வாசத்தை தெரிந்து கொள்ள தங்கள் நாக்குகளை அவை பயன்படுத்துகின்றன.

நம்பிக்கை: மீனினால் நீரில் மூழ்க முடியாது.


உண்மை: மீனினால் நீரில் மூழ்கமுடியும். மற்ற விலங்குகளைப் போல மீன்களும் உயிர்வாழ உயிர்க்காற்றை சுவாசிக்க வேண்டும். தங்களின் செதில்கள் மூலம் நீரிலிருந்து அவை தங்களுக்குத் தேவையான உயிர்க்காற்றைப் பெற்றுக் கொள்கின்றன. போதிய உயிர்க்காற்று இல்லாத தண்ணீரில் ஒரு மீன் நீந்த நேர்ந்தால், விரைவில் அது உயிர்காற்று அதிகம் கொண்ட தண்ணீர் உள்ள வேறு இடத்துக்கு செல்லவேண்டும். இல்லாவிட்டால் அது இறந்து மூழ்கி விடும். தண்ணீரில் உள்ள உயிர்க்காற்று சுற்றுச் சூழலால் மாசுபடுத்தப்படுவதால், ஆண்டுதோறும் கோடிக் கணக்கான மீன்கள் அழிகின்றன.

நம்பிக்கை: பன்றி போன்ற மூக்கைக் கொண்ட பாம்புகள் ஆபத்தானவை.



உண்மை: பன்றிமூக்கு பாம்பு அச்சம் தரத் தக்கது போன்று தோன்றி னாலும், அது ஆபத்தற்றது. தன் உடலின் முன் பக்கத்தை நாகப் பாம்பு போல் மேலே தூக்கி சீறவும், கடிப்பதுபோன்று பாவனை செய்யவும் அதனால் முடியும். எதிரிகளை அச்சமூட்டி விரட்ட நடத்தப்படும் நாடகமே இது. இவ்வாறு எதிரிகளை பயமுறுத்தும் முயற்சி பலிக்காமல் போனால் அடுத்த தந்திரத்தை அது கையாளும். அதாவது, இறந்து போனது போல் மல்லாந்து கிடப்பதே அது.

நம்பிக்கை: நட்சத்திர மீனினால் ஒரு மனிதனை இறுக்கிக் கொன்றுவிட முடியும்.



உண்மை: நீரில் நீந்துபவர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்துப் பின்வாங்கிச் செல்லவே நட்சத்திர மீன்கள் முயல்கின்றன. பெரும் பாலும் அவை கற்பாறைகள், பொந்துகளில் ஒளிந்து கொள்ளும் அல்லது சுற்றுச் சூழலில் மறைந்து போய் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நிறத்தை மாற்றிக் கொள்ளும். மக்களை நெருங்காமல் இருக்கச் செய்ய அது ஒரு வகையான மையினைப் பீய்ச்சியடிக்கும்.

இவை மற்ற கடல் வாழ் உயிரினங்களை நெரித்துக் கொல்வதில்லை. தங்களின் வலிமையான கிளிமூக்கு போன்ற மூக்கு களினால் தங்கள் இரையைத் உண்ணும் போது, அவற்றைப் பிடித்துக் கொள்ள தங்களின் எட்டு கைகளை அது பயன் படுத்திக் கொள்கிறது.


source:periyarpinju

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails