கம்பாலா : பெண்களுக்கு செய்யப்படும் சுன்னத் சடங் குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது.ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்குடி முஸ்லிம் பெண்களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுறவின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்களால் அனுபவிக்க முடியாது. அதுமட்டுமல்லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் பிரச்னை ஏற்படும்.பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா பார்லிமென்டில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடக்கும் சடங்கில் 3,000 பெண்களுக்கு சுன்னத் செய்யப்படும். பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment