Saturday, December 26, 2009

போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண் சூசன்னா மாய்லோ

 


வாடிகன் தேவாலயத்தில் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது பரபரப்பு வாடிகன் சிட்டி, டிச.26- வாடிகன் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையின் போது, இளம்பெண் ஒருவர் பாய்ந்து சென்று போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாடிகன் தேவாலயம் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவும் நேற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமாக விளங்கும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது போப் ஆண்டவர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி நற்செய்தி வெளியிடுவது வழக்கம். போப் ஆண்டவர் வந்தார் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைக்காக 82 வயதான போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் தேவாலயத்துக்கு வந்தார். அவர் தங்க, வெள்ளை நிற அங்கி அணிந்து இருந்தார். அவருடன் மதகுருக்களும் வந்தனர். தேவாலயத்துக்குள் போப் ஆண்டவர் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரு புறமும் திரண்டு நின்ற கிறிஸ்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கீழே தள்ளிய பெண் அப்போது, சிவப்பு நிற மேலாடை அணிந்திருந்த இளம்பெண் ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று தடுப்பு கம்பியை தாண்டி குதித்து போப் ஆண்டவரை நோக்கி ஓடினார். போப் ஆண்டவரை நெருங்கிய அந்த பெண், அவர் அணிந்திருந்த அங்கியை பிடித்து இழுத்தார். இதனால் போப் ஆண்டவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருடன் வந்து கொண்டிருந்த மதகுருமார்கள் சிலரும் தடுமாறி கீழே விழுந்தனர். மேலும் அந்த பெண்ணும் தரையில் விழுந்தார். இந்த சம்பவத்தால் தேவாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயம் இல்லை உடனே பாதுகாவலர்கள் ஓடி வந்து, கீழே விழுந்து கிடந்த போப் ஆண்டவரை தூக்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதுகாவலர்கள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் போது போப் ஆண்டவருடன் தடுமாறி கீழே விழுந்த, பிரான்சு நாட்டு கத்தோலிக்க மதகுரு ரோஜர் எட்சகாரே (வயது 87) காயம் அடைந்தார். அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனே அவரை சக்கர நாற்காலியில் அமரச் செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவாக இருந்தவர். 2 மணி நேரம் பிரார்த்தனை எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு சிறிது நேரத்தில் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியது. அதன்பிறகு போப் ஆண்டவர் 2 மணி நேரம் பிரார்த்தனை நடத்தினார். அவர் பதற்றம் எதுவும் இல்லாமல் வழக்கம் போல் பிரார்த்தனை நடத்தினார். போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளிய பெண்ணிடம் வாடிகன் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் சூசன்னா மாய்லோ (வயது 25) என்றும், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுள்ளார் என்றும் தெரியவந்தது. கடந்த ஆண்டு அந்த பெண் கடந்த ஆண்டும் இதேபோல் கிறிஸ்துமஸ் தினத்தன்று வாடிகன் தேவாலயத்துக்கு வந்து தடுப்பு கம்பியை தாண்டி குதித்து போப் ஆண்டவரை நெருங்க முயற்சி செய்ததாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெடரிகோ லம்பார்டி தெரிவித்தார். இப்போது 2-வது முறையாக அவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். வாடிகன் தேவாலயத்துக்குள் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகளை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

source:daily thanthi

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails