Tuesday, December 15, 2009

சார்லசுக்கு பதில் இளவரசர் வில்லியம்ஸ் மன்னர் ஆகிறார்

சார்லசுக்கு பதில் இளவரசர் வில்லியம்ஸ் மன்னர் ஆகிறார்; பட்டம் சூட்ட ராணி முடிவு
லண்டன், டிச. 14-
 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்ஸ் (27) இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமானப்படையில் பணிபுரிகிறார். 83 வயதான ராணிஎலிச பெத்துக்கு பிறகு அவரது மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டப்பட வேண்டும். ஆனால் அவரை மன்னராக்க ராணிக்கு விரும்பமில்லை.
 
அவருக்கு பதிலாக தனது பேரன் வில்லியம்ஸ்சை மன்னர் ஆக முடிசூட்ட விரும்புகிறார். சார்லசைவிட மன்னர் பதவிக்கு வில்லியம்ஸ் தான் பொருத்தமானவராக இருப்பார் என அவர் நம்புகிறார்.
 
எனவே ராணி எலிசபெத்தின் பணிகள் இப்போதே வில்லியம்ஸ்சுக்கு வழங்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகள், மக்களை சந்திப்பது போன்ற ராணியின் பணிகளை அவர் கவனித்து வருகிறார்.
 
பொதுவாக இங்கிலாந்து நாட்டின் மன்னராக இருப்பவர்கள் ராணுவ ஹெலிகாப்டரை தன்னந்தனியாக ஓட்டிச்செல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்காக இப்போதே வில்லியம்சுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இங்கிலாந்தின் நிழல் மன்னராக இளவரசர் வில்லியம்ஸ் செயல்படுவதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.
 
நிழல் மன்னராக செயல்படும் வில்லியம்ஸ் அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தினால் மன்னராக முடி சூட்டப்படலாம் என்று தெரிகிறது. இதற்கு ராணி எலிசபெத்தின் 88 வயது கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails