இலங்கை அதிபராக தாம் பதவியேற்ற உடன் உயரதிகாரிகளை நியமிப்பதில் சில தவறுகளை செய்துவிட்டதாக ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, தாம் முதன்முதலில் அதிபர் பதவிக்கு வந்து உயர் அதிகாரிகளை நியமித்தபோது 2, 3 தவறுகளைப் புரிந்துவிட்டதாகக் கூறினார். தமக்கு விசுவாசமாக நம்பிக்கையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நிர்வாகத்தின் உயர் பதவிகளை அவர்களிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு யார் தமது நம்பிக்கைக்கு விசுவாசமாக நடக்கவில்லை எனப் பெயரேதும் குறிப்பிடாத அவர், ஆனால் இச்செய்கை தனக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார். சந்தர்ப்பத்துக்கு தக்கமாதிரி அனைத்து நடவடிக்கைகளுக்கும் சரியான நபர்கள் இருந்தனர்.சில சந்தர்ப்பத்தால், மிகவும் துரிதமாக சமயோசிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத்தில் ஆறுதலாக தெளிவாக விவரித்துக்கொண்டிருக்கும் ராஜதந்திரியை நியமித்திருந்தேன். அல்லது சாந்தமாக, தந்திரமாக நடக்கவேண்டிய அரசியல்வாதி ஒருவர் தேவையான இடத்தில் தந்திரமான, முரட்டுத்தனமாக செயற்படும் ராணுவ அதிகாரியை நியமித்திருந்தேன்.இதனால் முழுநாடும் இப்போது ஆபத்தில் மாட்டியுள்ளது என்று ராஜபக்சே கூறினார்.
source:swissmurasam |
No comments:
Post a Comment