ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட தி எல்டர்ஸ் என்ற உலகின் முன்னணித் தலைவர்களைக் கொண்ட குழு, இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சிவிலியன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தி எல்டர்ஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிமுறையை எதிர்த்துப் போராடியவர்களில் ஒருவரும் அமைதிக்கான நொபெல் பரிசை வென்றவரும் ஆன பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ அவர்களின் கையொப்பத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் ஐ.நா. தலைமைச் செயலர் கோஃபி அன்னான், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்தி அஹ்திஸாரி, நோபெல் பரிசு வென்ற அமெரிக்க அதிபரான் ஜிம்மி கார்ட்டர், இந்தியாவில் சேவா உள்ளிட்ட பல பெண்ணுரிமை அமைப்புகளின் தோற்றுநரான இலா பட், நொபெல் பரிசு வென்ற பர்மாவின் ஜனநாயக ஆதரவு தலைவி ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொண்டது இந்த எல்டர்ஸ் அமைப்பு. இலங்கை ஜனாதிபதிக்கு தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எல்டர்ஸ் அமைப்பின் தற்போதையத் தலைவர் பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை நேயர்கள் கேட்கலாம். source:www.bbc.co.uk |
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment