புதுடில்லி : பெரிய உருவம் கொண்ட யானைகள் வசிப்பதற்கு மிருகக்காட்சி சாலைகளும், சர்க்கசும் ஏற்ற இடமல்ல, எனவே, இந்த மிருகத்தை சரணாலயம் அல்லது தேசிய பூங்காக்களில் பராமரிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய மிருகக்காட்சி சாலை ஆணையம், அனைத்து மாநில மிருகக்காட்சி சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. யானை, புலி போன்ற பெரிய மிருகங்கள் நடமாடுவதற்கு மிருகக்காட்சி சாலை மற்றும் சர்க்கசில் போதிய இடம் கிடையாது. எனவே, இந்த மிருகங்களை தேசிய பூங்காக்களிலோ, சரணாலயங்களிலோ கொண்டு விட்டு விடவேண்டும், என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்தின் கண்காணிப்பாளர் பி.கே.குப்தா குறிப்பிடுகையில், "நாடு முழுவதும் உள்ள 26 மிருகக்காட்சி சாலைகள் மற்றும் 16 சர்க்கஸ்களில், 140 யானைகள் உள்ளன. டில்லி மற்றும் மைசூர் மிருகக்காட்சி சாலைகளில் ஆப்ரிக்க யானைகள் உள்ளன. 1992ம் ஆண்டு சட்டப்படி எந்த மிருகக்காட்சி சாலையும், சர்க்கசும், யானைகள் மற்றும் புலிகள் வசிப் பதற்கு ஏற்ற இடமாக இல்லை, எனவே, இந்த மிருகங்கள் இனி சரணாலயங்களிலும்,தேசிய பூங்காக்களில் மட்டும் தான் பராமரிக்கப்பட வேண்டும்' என்றார்.
மேனகா கண்டனம்: ஒரிசாவில் கால்நடை கல்லூரி மாணவர்கள், கல்லூரி விழாவின் போது, நாய் உள்ளிட்ட பிராணிகளை முன்னங் கால்களை தூக்க செய்து நடக்க வைத்துள்ளனர். "இது மிருகவதைக்கு ஒப்பாகும்'என கூறி இதற்கு அனுமதியளித்த விவசாய பல்கலைகழகத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
source:dinamalar
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment