Monday, January 12, 2009

சி சியா அரசர் கல்லறை கூட்டம்

 

cri

நீங்சியா ஹுவே தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான யீன்சுவான், சீனாவின் வடமேற்கு பகுதியில் ஹெலான் மலையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. தனிச்சிறப்பான சுற்றுலா மூலவளங்களால், கடந்த சில ஆண்டுகளில் யீன்சுவான், பயணிகளை ஈர்த்து வருகிறது. இன்று, நாம் அனைவரும் இணைந்து சென்று, அங்குள்ள சி சியா அரசர் கல்லறைகள், ஹெலான் மலை பாறைகளிலுள்ள ஓவியங்கள் ஆகியவற்றைப் பார்த்து, பல இரகசியங்கள் வெளிப்படாமல், புதிதாகவுள்ள சி சியா வம்சத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் உணர்ந்துகொள்வோம்.
11ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரையான இரண்டு நூற்றாண்டுகளில், நாடோடிகளாக மேய்ச்சல் நிலத்தை தேடும் ஆயர்களின் வாழ்வைக் கொண்ட சியாங் இனத்தின் கிளையான தாங் சியாங் இனத்தவர்கள், தற்போதைய நிங் சியா ஹுய் தன்னாட்சி பிரதேசத்தை மையமாக கொண்ட சீனாவின் வடமேற்கு பகுதியில் சி சியா வம்சத்தை நிறுவினர். அப்போதைய ஜின் மற்றும் தெற்கு சூங்
வம்சங்களுடன் சேர்ந்து ஒரே காலக்கட்டத்தில் இது நிலவியது. பிறகு, மங்கோலிய இராணுவப்படையால் சி சியா வம்சம், தோற்கடிக்கப்பட்டு, சீனாவின் ஹன் இனத்திலும் இதர இனங்களிலும் படிப்படியாக கலந்துள்ளது. சீனாவில் இதுவரை ஒப்பிட முடியாத, மிக பெரிய அளவிலான, தரையிலுள்ள சிதிலங்கள் மிகவும் முழுமையாக உள் பேரரசர் கல்லறைக்களில் ஒன்றானது, கிழக்கு பிரமிடு என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயர், சி சியா கல்லறை என்பதாகும். இந்த கல்லறை கூட்டம், 1972ம் ஆண்டில் கண்டறியப்பட்டன. அதற்குப் பிந்திய 30 ஆண்டுகளில், அறிவியலாளர்கள் இங்கே அகழ்வு மேற்கொண்டு, ஆய்வு செய்தனர். அதில், சி சியா வம்சத்தின் மிக அரிய தொல்பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
இதில், சி சியாவின் கை எழுத்துக்கள், சி சியா மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்ற ஓவியங்கள், பல்வேறு வகை சிற்பங்கள், பல்வேறு காலங்களின் காசுகள் முதலியவை இதில் இடம்பெறுகின்றன. இங்குள்ள ஏராளமான
வடிவங்களிலான மிக தனிச்சிறப்பு மிக்க கற் சிலைகள், மண் சிலைகள் குறிப்பிடத்தக்கவை. சி சியா பண்பாட்டின் ஆய்வுக்கு, இந்த தொல்பொருட்கள் மதிப்புமிக்க உண்மையான பொருட்களாகும்.
சி சியாவின் பண்டைகால பண்பாட்டின் ஆய்வில் ஈடுபடுகின்ற சி சியா ஆய்வகத்தின் தலைவர் தூ சியான் லூ பேசுகையில், பல இரகசியங்கள் வெளிப்படாமல் மர்மமான சி சியா பேரரசர் கல்லறைகள், ஹெலான் மலையின் அடிவாரத்திலுள்ள பண்பாட்டு முத்துக்கள் ஆகும். சீன நடுப்பகுதியிலிருந்து வேறுபட்ட சி சியா தொல்பொருட்கள், ஈர்ப்பு ஆற்றல் மிக்கவை. சுற்றுலா பயணிகள், சி சியா பண்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ளும் சுற்றுலா இடமாக, இது உள்ளது. அவர் கூறியதாவது:
சி சியா அரசர் கல்லறைகள், யீன்சுவானின் மேற்கு புறநகரத்திலுள்ள ஹெலான் மலையின் கிழக்கில் அமைந்துள்ளன. அதன் பரப்பளவு சுமார் 50 சதுர கிலோமீட்டராகும். மொத்தம் 9 பேரரசர் கல்லறைகளும், அரசர்களோடு இணைத்து புதைக்கப்பட்ட 100க்கு மேலான கல்லறைகளும், இங்கு உள்ளன. பொதுவாக கூறின்,
இந்தக் கல்லறைகளில், தமது இனத்தின் தனிச்சிறப்பியல்பு மட்டுமல்ல, ஹன் இனத்தின் சில பழக்கவழக்கங்களும் உள்ளன என்றார் அவர்.
சி சியா வம்சத்தின் தொல்பொருள் ஆய்வகத்தின் ஆய்வாளர் நியூ தாசெங், சி சியா பேரரசர் கல்லறைகளைக் கண்டுபிடித்த அதிர்ச்சியை உணர்பூர்வமாக நினைவு கூர்ந்து கூறியதாவது:
மிகவும் பெரியதாகவும் தரிசாகவும் பல இரகசியங்களை வெளிப்படாமல் மறைத்திருக்கும் புதிராகவும், அவை இருப்பதை உணர்ந்து கொண்டேன். அவற்றில், எத்தனை பொருட்கள் உள்ளதென்று தெரியாது என்றார் அவர். சி சியா கல்லறைகளின் மூன்றாவது கல்லறையின் பரப்பளவு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டராகும். இங்குள்ள ஒன்பது பேரரசர் கல்லறைகளில், மிக பெரியதான மிக பாதுகாக்கப்பட்ட கல்லறை, இதுவாகும். இந்தக் கல்லறை மீதான அகழ்வு மற்றும் ஆய்வு, முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தூ சியான் லூ கூறினார்.
 
சீனாவின் பேரரசர் கல்லறை அமைப்பு முறை வரலாற்றில், சிங் வம்சத்தின் அரசர் கல்லறைகளை தவிர, சி சியா அரசர் கல்லறைகள் சிறுப்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த அரசர் கல்லறைகளாகும். சி சியா கல்லறைகளில், வண்ண கண்ணாடிகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடப் பொருட்கள், சீனாவின் கட்டுமான வரலாற்று ஆராய, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு கண்டறியப்பட்ட வெண்கல மாடு, கல் குதிரை உள்ளிட்ட தொல்பொருட்கள், சி சியாவின் கைத்தொழில் துறை மற்றும் அப்போதைய உற்பத்தி தொழில் நுட்பத்தை ஆராய, முக்கியத்துவம் வாய்ந்தது என்று தூ சியான் லூ தெரிவித்தார்

 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails