Monday, January 12, 2009

சாங் லாங் திங் தோட்டம்

 

cri
புகழ்பெற்ற 4 பழங்காலத் தோட்டங்களில் ஒன்றான சாங் லாங் திங் தோட்டம், சீனாவின் சூ ச்சோ நகரின் தெற்குப் பகுதியில் உள்ளது. அது, சூ ச்சோவில் மிகப் பழம் பெரும் தோட்டமாகும். சோங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்ட அதன் பரப்பளவு, 1.08 ஹெக்டராகும்.
சாங் லாங் திங் தோட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோட்டக் கலை வடிவம் சிறப்பாக இருக்கிறது. தோட்டத்தின் வாயிலுக்கு முன், சிறிய பசுமையான கால்வாய் வட்ட வடிவில் சுற்றி ஓடுகின்றது. இத்தோட்டத்துக்குள், மலைகளும் கற்களும் அடுத்தடுத்து அமைந்து அழகிய நில அமைப்பை உருவாக்குகின்றன. வாயிலில் நுழைந்ததுடன், மலை கண்பார்வையில் எதிர்படுகின்றது. புகழ்பெற்ற சாங் லாங் விதான மண்டபம் அங்கு இருக்கிறது.
இம்மலையின் அடி வாரத்தில், குளம் காணப்படுகிறது. மலையையும் குளத்தையும், சுற்றி வளைத்தபடி ஒரு தாழ்வாரம் இணைக்கிறது. இத்தாழ்வாரத்தின் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்தால், தோட்டத்தின் உள்புற மற்றும் வெளிப்புறத்திலான மலை மற்றும் நீர், உயற்கைக்கு நன்றாக பொருந்தி காட்சியளிக்கின்றன. Mingdaotang என்ற மண்டபம், இத்தோட்டங்களில் உள்ள முக்கியக் கட்டிடமாகும். அங்கு, Wubaimingtangci கோயில், Kanshanlou மாளிகை, Cuilinglongguan மண்டபம், Yangzhiting விதான மண்டபம் முதலியக் கட்டிடங்களும் காணப்படுகின்றன.
சாங் லாங் திங் தோட்டம், சியாங் சூ மாநிலத்தின் தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அது, யூனேஸ்கோ அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பண்பாட்டு மரபு செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails