Friday, January 2, 2009

இஸ்ரேல் விமானம் 7-வது நாளாக குண்டுவீச்சு:தீவிரவாத தலைவர் குடும்பத்துடன் பலி-மரணம் எண்ணிக்கை 402-ஆக உயர்வு

 
 
lankasri.comபாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 6-நாட்களாக விமான தாக்குதல் நடத்தியது.இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சில் காசா நகரம் தீ பிடித்து எரிகிறது.வீடுகள்,கட்டிடங்கள் தரை மட்டமாகி வருகின்றன.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

இந்த தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் நிசார் ரயான் கொல்லப்பட்டார்.அவருடன் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்பட 9-பேர் இதில் பலியானார்கள்.இன்று 7-வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை தொடர்ந்தது.ஒரு வாரமாக நடந்ததாக்கு தலில் காசா பகுதியில் மட்டும் 402-பேர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் இயக்கத்தினரும் ராக்கெட்டுகளை செலுத்தி எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இதை தொடர்ந்து இஸ்ரேல் தரைவழி தாக்கு தலையும் தொடங்கி உள்ளது.இஸ்ரேலின் பீரங்கி படை ஹமாஸ் இயக்க முகாம்களை நோக்கி முன்னேறி செல்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஹமாஸ் இயக்கத்தின் 4-தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எகிப்து எல்லையை ஒட்டி ஹமாஸ் இயக்கத்தினர் அமைத்திருந்த பாதாள சுரங்க பாதையையும் இஸ்ரேல் குண்டுவீசி தகர்த்தது.

பாலஸ்தீனம் மீது தாக்குதலை நிறுத்தும்படி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.ஆனால் தாக்குதலை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230913297&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails