Friday, January 2, 2009

உயிரிழந்த பெண் புலி உறுப்பினரை இழிவுபடுத்தும் வகையிலான காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் - கெஹலிய

 
 
மோதல்களின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மற்ற வகையில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை உடல் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறும் என்பதை முற்றாக மறுக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் ஐந்து லட்சம் பேரைக் கொண்ட பாதுகாப்புத் தரப்பில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுகின்றமை வியக்கத் தக்கதொன்றல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்டிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பின்நிற்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பைவிட இராணுவ நீதிமன்றம் இந்த சம்பவம் குறித்து முனைப்புடன் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட பெண் போராளி ஒருவரை நிர்வாணப்படுத்தி மிகவும் மோசமான வகையில் நடத்தப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பிரயோகிக்கும் மொழி மற்றும் அவர்களது சீருடைகள் என்பவற்றை கவனிக்கும் போது இதனை யார் செய்திருக்கக் கூடும் என யூகிப்பதில் சிக்கல் இல்லை என கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.tamilwin.com/view.php?2a26QVR4b33F9EOe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dLZLucce02g2hF0cc2tj0Cde

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails