|
|
மத்திய அரசுக்கு அமெரிக்காவில் இருந்து 2-இ.மெயில் கடிதம் வந்துள்ளது.அதில் பெங்களூரில் உள்ள இன்போசிஸ், விப்ரோ, அக்சென்டர், கேப்கெமின், கிரேன்ஸ் சாப்ட்வேர் ஆகிய கம்ப்யூட்டர் நிறுவனங்களை தகர்க்கப் போவதாக கூறப்பட்டுள்ளது.இதையடுத்து மத்திய உளவு துறை கர்நாடக அரசுக்கு தகவல் கொடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி கூறியது. எனவே அந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே தீவிரவாதிகள் பெங்களூருக்கு குறி வைத்து இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது.இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். இப்போது இ.மெயின் மிரட்டல் வந்து இருப்பதால் மிகவும் உஷார் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து இ.மெயிலை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க மத்திய உளவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1231084927&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment