Wednesday, October 8, 2008

ஓய்வு பெறுவது சச்சின் விருப்பம்! : மெக்ராத், ரிச்சர்ட்ஸ், சேவக் அதிரடி

 
lankasri.com "கிரிக்கெட் அரங்கில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்து சென்று விட்டனர். ஆனால் 16 வயதில் தனது ஆட்டத்தை துவக்கிய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலகின் தலைசிறந்தவீரராகஇன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு யாரும் ஓய்வு அளிக்க முடியாது. ஓய்வு எடுக்கும் முடிவை அவரது விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும்,'' என மெக்ராத், ரிச்சர்ட்ஸ், சேவக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியன் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். 19 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த வீரராக திகழ்கிறார். இவரது ஓய்வு குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவின் மெக்ராத், வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்திய வீரர் சேவக் ஆகியோர் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டி:

மெக்ராத்(ஆஸி., முன்னாள் பந்து வீச்சாளர்): கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத வீரர் சச்சின். இரண்டாவது இன்னிங்சில் இவர் சரியாக விளையாடுவது இல்லை, தொடரின் இறுதிப் போட்டியில் சோபிக்க மாட்டார் என்று குறை கூறுகிறார்கள். புள்ளி விவரங்கள் அடிப்படையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அவரை, விமர்சனப் படுத்துவது மனதளவில் காயப்படுத்துவது போன்றது. வயதளவில் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் கட்டத்தை நெருங்கி விட்டார். பொருளாதாரத்திலும் போதுமான உயர்வு பெற்று விட்டார். மனதளவில் தனக்கு வலிமை உள்ளதாக கருதும் பட்சத்தில், அவர் தொடர்ந்து போட்டிகளில் தடையின்றி பங்கேற்கலாம். கிரிக்கெட் அரங்கில் 16 வயதில் காலடி வைக்கும் போது எப்படி இருந்தாரோ? அதே மகிழ்ச்சியுடன் தான் சச்சின் தற்போதும் உள்ளார்.

விவியன் ரிச்சர்ட்ஸ் (வெ.இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன்): கிரிக்கெட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட சச்சின், தற்போதைக்கு ஓய்வு பெற அவசியமில்லை. ஒரு திறமையான வீரர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது இயல்பு. சச்சின் இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட்டில் பங்கேற்கலாம். இதன் மூலம் ரசிகர்களுக்கு கிரிக்கெட் மீது உள்ள உற்சாகத்தை அதிகப்படுத்த முடியும்.

சேவக் (இந்திய வீரர்): கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின். கிரிக்கெட் அரங்கில் இன்னும் அதிக ரன்கள் அவர் சேர்க்க வேண்டும். தவிர, அவர் மனம் விரும்பும் வரை அதிக ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டும். விமானத்துக்காக காத்திருக்கும் போதும், விமானத்தில் பயணம் செய்யும் போதும், யாரும் கிரிக்கெட் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் சச்சின் அப்போதும் கிரிக்கெட் பற்றி தான் பேசுவார். அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர் என கருதுகிறேன். விளையாட்டு நுணுக்கங்கள், திறமைகள் ஆகியவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

"நம்பர்1' வீரர் : உலகின் சிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் அளித்துள்ளார் ஆஸ்தி ரேலியாவின் சுழல் மன்னன் ஷேன் வார்ன். தனது "ஷேன் வார்ன் செஞ்சுரி' என்ற புத்தகத்தில் சச்சினுக்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் லாராவை குறிப்பிட்டுள்ளார். "டாப்100' பட்டியலில் இந்தியா சார்பில் கபில்தேவ், கங்குலி, டிராவிட் லட்சுமண், ஹர்பஜன், சேவக், கும்ளே, அசாருதீன், வெங்சர்க் கார், ரவிசாஸ்திரி உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223276889&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails