| | ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு எதிராகவும்,அரசுக்கு எதிராகவும் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் இப்போது நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள்.
கந்தகார் அருகே பயணிகள் மற்றும் ராணுவத்தினரை ஏற்றிச் கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். மேலான்டு பகுதியில் அந்த பஸ் சென்று கொண்டிருந்த போது தலிபான் தீவிரவாதிகள் அந்த பஸ்சை சுற்றி வளைத்தனர்.பஸ் நின்றதும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள்,வாள்ஆகியவற்றுடன் பஸ்சுக்குள் சென்றனர்.
பஸ்சுக்குள் சாதராண உடையில் இருந்த ராணுவ வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியே இழுத்து வந்தனர்.அவர்களை தீவிரவாதிகள் வாளால் வெட்டி கொன்றனர். மொத்தம் 30பேரை தீவிர வாதிகள் வெட்டி கொன்றனர்.இவர்களில் 27பேர் ராணுவத்தினர்.தீவிரவாதிகளை எதிர்த்த 3பயணிகளும் வெட்டி கொல்லப்பட்டனர்.பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் தப்பினர்.
தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு மட்டும் 1300பேர் பலியாகி இருக்கிறார்கள். | |
No comments:
Post a Comment