Wednesday, October 15, 2008

ராமர் பாலம் வழிபாட்டுத்தலம் தான்:ராம.கோபாலன் அறிக்கை-மத்திய அரசு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது

 
 
lankasri.comஇந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-ராமர்பாலம் வழிபாட்டுத்தலம் அல்ல என்று ஆளும் காங்கிரஸ் அரசு உச்ச நீதி மன்றத்தில் 100பக்க மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ராமர் பாலம் வழிபாட்டுத்தலம் தான் என்பதற்கான எல்லா ஆதாரங்களையும் நானும் எனது மனுவில் தாக்கல் செய்து இருக்கிறேன்.

ஒருவேளை நீதி மன்றம் நியமித்துள்ள பச்சோரி கமிட்டி மாற்றுப்பாதை சாத்தியமில்லை என்று கருத்து தெரிவிக்குமோ என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்படுகிறது.அந்த ஆய்வறிக்கையை புறந்தள்ளி விட்டு ராமர் பாலத்தை இடிப்பதற்கான கொல்லைப்புற வழி தான் அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை என்று சொல்லத் தோன்றுகிறது.

ராமர் பாலம் வழக்கில் நானும் ஒரு மனுதாரர்,மனுதாரர்களுக்கு தெரியாமல் ரகசியமாக ஒரு மனு வைத்தாக்கல் செய்திருப்பது நாகரீகமான செயல் அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.ஒரு இடம் வழிபாட்டுத் தலமா,இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது பக்தர்கள் தான்.அரசு இந்த உரிமையில் தலையிட அனுமதிக்க மாட்டடோம்.

இந்துக்களுடைய நம்பிக்கையின் அரசு குறுக்கீடுகளையும், தகர்க்க முயற்சிப்பதையும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். தனுஷ்கோடிக்கு செல்வதற்கு வசதிகளே இல்லாத நிலையில் கூட தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார்கள். ராமரே இல்லை என்று அவசர அவசரமாக ஒரு மனுவை தாக்கல் செய்து அதை திரும்பப்பெற்று அவமானப்பட்டது அரசுக்கு மறந்து விட்டது போலும்.

மணல் அள்ளும் விசயத்தில் பலகோடி ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறப்படும் இந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த முயற்சி எதிர்மறை விளைவுகளைத்தான் உருவாக்கப் போகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த இந்து விரோத நடவடிக்கைக்காக இவர்களை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள்.

சட்ட வல்லுனர்களின் துணை கொண்டு அரசின் வரம்பு மீறிய செயலை மீறியடிப்போம். நேற்று இரவு ராமநாதபுரத்தில் நாகராஜன் என்ற பா.ஜ.க.கவுன்சிலர் மூது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இஸ்லாமிய பயங்கரவாதிகள் தான் இந்தக் கொடிய செயலைச் செய்திருப்பார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காவல் துறை உடனடியாக செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கோருகிறது. கடந்த சில மாதங்களாகவே ராமநாதபுரத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது.மாநில அரசு உடனடியாக இதைத்தடுத்த நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails