|
|
வரும் மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கூறினார்.அமிர்தா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார அம்சங்களில் ராமர் கோயில் விவகாரம் இடம்பெறவில்லை. கூட்டணி திட்டத்தில் ராமர் கோயில் பிரச்னை இல்லை என்றார் அவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்கு நான் ஆதரவாகவே உள்ளேன். அயோத்தியில் கோயில் கட்டினால் தான் எனது மனது திருப்தியடையும் என்று அவர் கூறினார். நாம் வாக்குறுதி கொடுத்துவிட்டு அது நிறைவேற்ற முடியாமல் போனால் தவறாகிவிடும் என்றார் அவர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுபோல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி உள்ளிட்ட சகோதர அமைப்புகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன என்று அத்வானி கூறினார். முஸ்லிம்களின் நலனில் எனக்கும் அக்கறை உள்ளது. முஸ்லிம்கள் மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து என யாராக இருந்தாலும் ஏழைகளின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அத்வானி. |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224147042&archive=&start_from=&ucat=1&
No comments:
Post a Comment