| | ஈரான் அதிபர் அகமதிநிஜாத்துக்குப் பதிலாக அந்நாட்டு மதத் தலைவருடன் அமெரிக்கா பேச்சு நடத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். ஈரான் முன்னாள் அதிபரும்,மதத்தலைவருமான அயத்துல்லா அலி கொமேனி காலத்தில் இருந்து ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் அகமதி நிஜாத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே,அகமதி நிஜாத்துக்குப் பதிலாக அயத்துல்லா அலி கொமேனியின் வாரிசு மதத் தலைவருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும்,இதன் மூலம் இருநாட்டுக்கும் இடையில் மீண்டும் சுமூக உறவு ஏற்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்நோக்கர் சஜாத்பூர் அறிவுறுத்தியுள்ளார்.அவரது ஆலோசனைக்கு அரசியல் நோக்கர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
| |
No comments:
Post a Comment