| | ஈரான்,சவூதிஅரேபியா,போன்ற நாடுகளில் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. கொடும் குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றி பொது இடத்தில் தூக்கில் போடுகிறார்கள்.
18 வயதுக்கு குறைந்த சிறுவர்களும் கூட தூக்கிலிடப்படுகிறார்கள். சிறுவர் கள் தூக்கிலிடப்படுவது ஈரானில் அதிகம்.
இந்த ஆண்டு மட்டும் ஈரானில் 6சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 25சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.அவர்கள் தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளனர். அவர்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்யும்படி மனித உரிமை கமிஷன் வற்புறுத்தி வந்தது.இந்த நிலையில் 25சிறுவர்களின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கும்படி ஈரான் அரசு உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டு தலைமை வக்கீல் தெரிவித்துள்ளார். | | |
No comments:
Post a Comment